பூவ பூவ பூவ

தியாகிதான்
நீ
உன்னை போலவே
மற்ற பூக்களும்
அவள் கூந்தலின்
வாசம் அறிய
மறித்து போகிறாயோ


உன் கூந்தல் என்ன
வாசனை புதையலோ
பறிக்கப்பட்ட
பூக்களெல்லாம் வாசத்தை தக்கவைத்துக்கொள்ள
உன்னிடம் தஞ்சம் அடைகின்றன

உன் தலைக்கு பாரமென்றுதான்
வாடிவிடுகின்றனவா
இந்த பூக்கள்

இறந்த பூக்களும்
இளமையாகும்
இழந்த வாசனையும்
இருமடங்காகும்
பெண்ணே
நீ சூடிக்கொள்வதால் ..

வறட்சி காலங்களிலும்
பூத்துக்குலுங்கும்
ஒரே இடம்
உன் கூந்தல்

எழுதியவர் : திருக்குமரன்.வே (2-Aug-17, 2:31 pm)
சேர்த்தது : thiru
பார்வை : 114

மேலே