ஹைக்கூ

எவ்வளவுதான்
சுற்றினாலும்
கூண்டை விட்டு
வெளியில் செல்ல முடியாது
கடிகார முள்
........****........

மிதிக்க மிதிக்க
உன்னை முன்னேற்றுகிறது
மிதிவண்டி
..........*****......

சாதிகள் இல்லையடி பாப்பா
என்றது
கோனார் தமிழ் உரை
...........*****........

இரவும் பகலும்
ஒரே மாதிரிதான்
நீ
இல்லாத நாட்களில்
.........******........

மணிக்கொருமுறை
உன்
வீட்டின் அருகே
நான்
நீ
இல்லை என்று
தெரிந்தும்
.........******.......

திரும்ப திரும்ப பேச்சு
கோபம்
ரசிப்பு
அப்பாவிடம் , குழந்தையிடம்
.........*****........

எழுதியவர் : திருக்குமரன் (19-Oct-15, 1:55 pm)
Tanglish : haikku
பார்வை : 178

சிறந்த கவிதைகள்

மேலே