பெண் ஓர் அதிசயம்
ஜன்னலிலே தென்றலது
சத்தமின்றி நுழைகிறதே
சாலையிலே நீ நடக்க
சாமந்தி பூ பூக்கிறதே
மெல்ல மெல்ல நடப்பவளே
மேலாடை மறைப்பவளே
புள்ளி வைத்து கோலமிட
பூமிதாயும் கெஞ்சிடுதே
அள்ளி முடியும் கூந்தலிலே
ஆவாரம்பூ மலர்கிறதே
அன்னமிட்டு கொஞ்சிடவே
ஆண்கள் பலர் கெஞ்சினரே
துள்ளி நீயும் குதித்திடவே
தூரப்பார்வை முதியவர்கள்
கண்ணின் ஒளி வேண்டுமென
காஞ்சி கோவில் சென்றனரே
மல்லிகைப்பூ மொட்டெடுத்து
மாலையில் நீ சூடிடவே
மாந்தோப்பு மரங்களெல்லாம்
மார்க்கமாக பார்க்கிறதே