சில்லுனு ஒரு சூடு
நான் பெற்றவனுடன்
நடந்துகொண்டிருந்தேன்
ஒரு ஞாயிறு காலை.
வளர்ப்பு நாயுடன்
வாயாட முடியாமல்
முதியவர் ஒருவர்
மூச்சிரைக்க முந்தினார். .
”பயிற்றுவித்திருந்தால்
இப்படி படுத்தாதல்லவா?”
”நான் தவறிவிட்டேன்
நீங்கள் தொடங்கிவிட்டீர்களா?”
புரியாமல் விழித்தவனை
பூடகமாய் பார்த்தார்;
கைவிடுத்துச் சென்ற
என் பிள்ளைக்கும் எனக்குமான
கணிசமான இடைவெளியை...
சூடாக இல்லாமல்
கூலாக சுட்டியவர் முகத்தில்
புத்தரின் புன்னகை!