Gopinath J- கருத்துகள்

எனது கவிதைகளும் தங்களின் ரசிப்பிற்கு உகந்ததாய் உள்ளது அறிந்து மனம் மகிழ்கிறது. நன்றி.

ஒரு குறும்படத்திற்கான மிக நுணுக்கமான உணர்வுகள் கூடிய ஒரு காட்சிப்படுத்தலை, தேர்ந்தெடுத்த சொற்களால் அருமையான கவிதையாய் கண்முன் கொண்ர்ந்திருக்கிறீர்கள். பல்வேறு மனப்போராட்டங்களுக்குப் பிறகு இறுதியாக சபலத்திற்கு அடிப்பணியாமல் முடித்த விதம் சிறப்பு.

’வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல’ என்பது கேட்டுப் புளித்துப் போன ஒன்று என்பதால் சற்று வித்தியாசமாக கவிதையின் இறுதி வரிகளிலிருந்தே தலைப்பினை உருவாக்கினேன். பாராட்டியமைக்கு நன்றி.

அழகுத் தமிழில் அருமையான கவிதை.

எதையும் சேர்த்து வைக்காது ஊதாரித்தனமாக செலவழித்த அப்பாவுக்கு ஓட்டாண்டி என்ற பட்டப்பெயர். சிக்கனமாக செலவு பண்ணி, எதிர்காலத்திற்கென ஓரளவு சேர்த்துவைத்திருக்கும் எனக்கு கஞ்சப்பிசினாறி என்ற பட்டப்பெயர். இவ்வளவுதாங்க வாழ்க்கை! நகைச்சுவைக்குப் பஞ்சமில்லாமல் பின்னிப் பெடலெடுத்திருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.

இக்கவிதையை வாசித்ததற்கும், பாராட்டியதற்கும் என் மனமார்ந்த நன்றி.


Gopinath J கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே