என் உயிரினில் கலந்தவள்

என் உயிர்வேறு உடல்வேறு
என பிரியக்கண்டேன்
நான் மூச்சில்லாமல் உயிர்
வாழ்வதை அறிய கண்டேன்
என்னுள் வியாபித்து என்னுடலில்
உன்உயிர் ஆதல்கண்டேன்
நானென்பது நானல்ல உன்னுள்
புதையக்கண்டேன்
பெரிய அடர்ந்தவனத்தினுள் சிறு
உயிரென மறையக்கண்டேன்
நீ என் பக்கத்தில் உரசி
உட்காரும்பொழுது

எழுதியவர் : அன்புக்கனி (21-Aug-18, 8:02 pm)
சேர்த்தது : அன்புக்கனி
பார்வை : 452

மேலே