வாடகை வீடு

அளவறிந்து நீர் வார்க்கும்
தண்ணீர் குழாய்
ஆயிரம் கேள்விகளுக்கு
மத்தியில்
ஆர்பரித்து மாட்டிய
ஆண்டெனா
மிதியடி இடத்துக்கும்
மீதமில்லாமல் பிரச்சனை..

காற்றினில் பறக்கும்
தேங்காய் நாறு
சோப்பு நீர் மிதக்கும்
மொட்டை மாடி
வேகமாக மூடப்பட்ட கதவு
வீணாக வரும் சண்டை..

இப்படி இருந்தால்
இதுவும் தப்பு
அப்படி இருந்தால்
அதுவும் தப்பு
திரும்பி பார்ப்பதற்கே
குறைக்கும் நாய்போல்
தொட்டதுக்கெல்லாம்
தத்துவங்கள்...

வந்து வீழ்ந்த தத்துவங்களில்
வெகுண்டெழுந்து வீதிபோய்
நூறு வீடுகள்
எரியிறங்கி பார்த்தபின்
கடற்கரை மணலில்
மோதி நிற்கும்
கப்பல் போலவே
எத்தனையோ
நினைவுகளை
புதைத்து நிற்கும்
வாடகை வீட்டின்
வாசலில் நாம்...

எழுதியவர் : சந்தோஷ் (2-Mar-21, 8:49 pm)
சேர்த்தது : சந்தோஷ்
Tanglish : vaadagai veedu
பார்வை : 137

மேலே