கடவுள் கேட்கும் கேள்வி
நூறாண்டு கோவில்
இடிக்கிறார்கள் புதுப்பிக்க
தெருவுக்கு ஒரு கோவில்
நாம் செல்வதெங்கே...
பூசலார் பெருமையெலாம்
பாட்டுடன் மறந்துவிட்டு
பாமரனை படுத்தும்
நவீன கால கோவில்கள்...
பல ஆயிரம் வாங்கி
கோவில் கட்டி தங்களை பெருமைப்படுத்த நினைத்து நம்மை பாடாய் படுத்தும் இவர்கள்...
கடவுள் நேரே வந்தால் ஒற்றை கேள்வி கேட்பார் நானா கேட்டேன் என்று...
உள்ளமே பெருங்கோவில் ஊன் உடம்பே ஆலயம் என்று
திருமூலர் சொல்வதே நினைவு வருகிறது ..
என்னை பொறுத்தவரை
அன்பும் கருணையும் கொண்டவரின்
உடலே கோவில் அவர் ஆன்மாவே
கடவுள்... அவ்வளவே....