பலாப்பழ முட்கள்

உருவங்கள் உரைப்பதில்லை
உடுத்தும் உடையும்
உணர்த்துவது இல்லை...
மதம் கொண்ட யானை
தன் தலை மீது மண்ணல்லி
மயக்கம் போக்கும்...
மதம் கொண்ட நாம்
இங்கு கடவுளின் பெயரில்
போகும் போக்கில் வீசி விட்டு
செல்கிறோம் மண் மூட்டைகளை...
வாய்பேச்சுகள் எல்லாம் உண்மையில்லை
தன் இருப்பை காட்ட கத்திவிட்டு
கல்லெடுத்து எரிகையில் சிதறி
காணாமல் போகும் ஞமலி கூட்டம்...
உனக்காக வாழ்
உனக்காக பேசு
உனக்காக சிரி
உள்ளுக்குள் இருக்கும்
சுளையின் இனிமை விடுத்து
சுள்ளென்று குத்தும்
பலாப்பழ முட்களாய் வாழாதீர்...

எழுதியவர் : சந்தோஷ் (4-Feb-19, 8:58 pm)
சேர்த்தது : சந்தோஷ்
பார்வை : 82

மேலே