என் ஆசை அழகிய செல்வமே நீ எப்போது வருவாய் 555

என் செல்லமே...
உன் தாயின்
கருவறையில்...
நீங்களாக இரட்டையர்கள்
என்று கேட்டதும்...
நான் துள்ளி குதித்த
சந்தோசத்திற்கு அளவில்லை...
சந்தோசத்தை எளிதாக
சொல்லிவிடவும் முடியாது...
இரட்டை சகோதரர்கள் உங்களை
எப்படியெல்லாம் வளர்க்க வேண்டும்...
ஆயிரம் ஆயிரம் ஆசைகளும்
கனவுகளும் எனக்குள்...
தோளில் சுமக்க
உன் தந்தையும்...
இடையில் சுமக்க உன்
தாயும்
தயாராக இருக்கும்போது...
நீ வேதனை கொண்டாயோ
கருவறையில்...
இரட்டையர்களாக
நாம் பிறந்தால்...
தந்தையும் தாயும்
என்ன
செய்வார்கள் என்று...
எங்கள் கைகளில் வருமுன்னே
வேதனை கொண்டாயோ...
என் செல்வமே...
இருட்டறையில் இருந்து
உலகை ரசிக்க...
இரட்டையர்களாகா வளம்வர
வேண்டி
காத்திருந்தேன்...
எங்கள் சிரமம் கண்டு
கண்ணீர் வடித்தாயோ...
நீ மண்ணிற்கு வராமலே
கருவறையில் கருகிவிட்டாயோ...
என் ஆசை செல்வமே...
அடுத்தமுறை இந்த தந்தையை
காண காத்திருக்கிறாயோ...
எங்கள் கைகளில் வரபோகும்
உன் சகோதரனுக்கும்...
உனக்காகவும்
காத்திருக்கிறோம் நாங்கள்...
உன் ஆசை தாயும் உன்
அன்பு
தந்தையும் என் செல்வமே.....