தைரியமே

உள்ளக் கடல் மூழ்கி
உயிர்த்தெழும் ஆவியாய்
என் ஜீவ நதியில்
உன் வாசனை

சமர் செய்து
சமரசம் காண்போம்
முழுமை கண்டு
முடிவு எடுப்போம்

உலக வழக்கம்
மாற்றம் வேண்டுகிறேன்
சிறைகளே
பள்ளிக்கூடங்களாக

கனவுகள் தொலைக்கிறேன்
கலங்கியே நிற்கிறேன்
சாபம் தந்து விடாதே
உன்னோடே சாகிறேன்...

எழுதியவர் : பர்வின்.ஹமீட் (4-Feb-19, 4:39 pm)
Tanglish : thairiyame
பார்வை : 173

மேலே