ஆத்மார்த்தமான நன்றிகள்

குளிரில் நடுங்கும் இரவு
ஒற்றை போர்வை
நீயும் நானும்.

உன் அருகில் என் இரவுகள்
சுகமான அனுபவம்..

உன் காதில் நான் சொன்ன
கவிதைக்கு நீ ஒன்றும்
சொல்லாமல் அமைதியாக நீ... தூக்க கலக்கத்தில் நான்...

நள்ளிரவில் நான் கொடுத்த முத்தம்
உன்னை சிலிர்க்க வைத்ததா.

உன் பஞ்சு உடலில் நான்
நான் சாய்ந்த போது உனக்கு வலித்ததா.

உன் அருகில் என் இரவுகள்
சுவர்க்கம் தான்..

என் இரவுகள் முழுக்க துயில்
கலைக்காத தலையனையே என் ஆத்மார்த்தமான நன்றிகள்

எழுதியவர் : சந்தோஷ் (27-Jan-18, 12:26 pm)
பார்வை : 207

மேலே