தமிழ் நம் உயிருக்கு நேர்

தத்தளித்து கொண்டிருக்கிறோம்
கண்ணீர் கடலில்
தண்ணீருக்கு வழியின்றி...

முப்போகம் விளைந்தது போக
எஞ்சி இருபது
எலிக்கறி மட்டும் தான்...

ஆற்றின் கரைதெறியா
நேரம் போய்
மைதானம் ஆகிவிட்ட
ஆற்றினில்...

கனல் கக்கும்
தமிழ் துறந்து
வேற்றுமொழி பயிலும்
தருணம் இது...

செந்தமிழ் தொட்ட
பாடல்கள்
இன்று கொலைவெறி
கொண்ட கோலத்தில்...

தமிழ் இன்று
ஆட்டுக்கிடைகளாய்
ரோட்டுகடைகளில்...

நம் பழமைகளில்
எஞ்சியிருப்பது
தமிழ் மட்டும் தான்

தமிழை தாழ்த்தி
பேசாதீர்கள்...

தமிழை ஏசுவோர்
கைக்கு விலங்கிடுவோம்...

அவர் நாவை
தீக்குசிச்கு தின்ன
கொடுப்போம்...

தமிழ் நம் உயிருக்கு நேர்
எஞ்சியிருக்கும் உயிரையாவது
மிஞ்சியிருக்கச்செய்வோம்...

எழுதியவர் : சந்தோஷ் (28-Jan-18, 6:47 am)
பார்வை : 225

மேலே