Thamizhodu naan

என்னுள் சில நாட்களாய் ஏதோ ஒரு மாற்றம்;
ஒருவித மொழிவெறி என்னைப் பற்றிக்கொண்டதை உணருகிறேன். ஒருவித ஆடையாளத்தை அடைய விரும்புகிறேன்.
கொஞ்சம் எனக்குள் ஆழ்ந்து ஆராயப்போகிறேன் மாற்றத்தின் தாக்கத்தை....
சிலப்பேச்சாளர்கள் நிகழ்த்திய வார்த்தை விளையாட்டு;
என்னோடு தமிழையும் தமிழோடு என்னையும் இணைத்துப்பூட்டுகிறது.. குற்றவாளிகளாய் இதோ கூண்டில் ஏற்றுகிறேன் உங்கள் நீதிவேண்டி..
முதல் குற்றவாளி - கவிஞர் கண்ணதாசன்
தமிழோடு அவன் கொஞ்சியதுப்போல தாமரையோடு வண்டுக் கொஞ்சியதில்லை.
தண்ணீரிலே அவன் மிதக்க;
தாரகைகள் பக்கம் கிடக்க;
கம்பனும் அவன் விரல் பிடிக்க; விழுந்தாள் கவிமுத்துக்கள் அத்தனையும் கவிஞரின் சொத்துக்கள்.
ரசிகன் அவன் ரசித்தப் போதெல்லாம் அது கவிதையாயிற்று;
கன்னியருக்கு அவன் மையால் கூட்டியது கவிதை ஊற்று.
பேணா மையால் காவியம் படைத்தவன் தன்னுடல் பேணாமையால் உயிர் நீத்தான்.
மானிட தத்துவத்தை அர்த்தமுள்ள மதமாக வார்தான்.
வீட்டுக்குள் நடைந்ததை பாட்டுக்குள் பூட்டிவைத்தான்;
பாட்டுக்குள் பூட்டியதை கோட்டைக்குள் ஏற்றிவைத்தான் .
இறைவன் இல்லைஎன்றான் பின்னொரு நாளில் இறையல்லாது வேறொன்றுமில்லை என்றான்; அனுபவமே பாடமாக்கி அடுத்தத் தலைமுறைக்குப் பரிசளித்தான். இரண்டாம் குற்றவாளி - கலைஞர்.
தன் கரகரத்தத் தமிழால் கரம் கோர்த்து கொள்கைப் பரப்பியவன்.
தஞ்சைப் பள்ளியையும் காஞ்சிக் கல்லூரியையும் அறமும் மொழியுமாய்ப் பயின்றவன்.
தன் இச்சையோடு தனிச்சையாக தனித்தமிழ் தேன் பாடுபவன்.
உவமை இவன் விரலிடைகளில் விளையாடும்;
நய்யாண்டி இவன் நாவடியில் நடனமாடும்.
வசனங்கள் இவனின் பேணா வழியிரங்க ஏங்கிநிற்கும்;
வார்தைகள் இவன் வாயுதிர்க்க வேண்டிநிற்கும்;
கன்னகி கோபத்தைக் கனலாய்த் தமிழில் காட்டியவன்;
கோவலனின் மானத்தை கொடுவாழால் வாட்டியவன்;
கடவுள் இல்லையெனும் வழி வந்தவன்; கருமமேக் கடவுளென வாழ்ந்துக் காட்டியவன்.
ஆம் திராவிடம் தந்த கலைமகன்; தமிழுக்கோர் தலைமகன்

எழுதியவர் : sundar (30-Jan-18, 12:45 pm)
சேர்த்தது : Kadaithamizhan
பார்வை : 80

மேலே