தமிழ்

எங்கும் தமிழென்று முழங்கு

செந்தமிழ் வாழவே செப்பிடு மானிடா
பைந்தமிழ்ப் போற்றிப் பசுமையான கீதமே
தீந்தமிழ்ச் சொற்களால் தீண்டிட வேண்டுமாய்
தெள்ளுதமிழ்ப் பேசினால் தெம்பு .


வாழிய செந்தமிழ் வாழியவே எந்நாளும்
நாழிகை தோறுமாய் நம்முன்னே நிற்கவே
ஊழியம் செய்வோம் உவந்து மகிழவே
ஆழியாய் மாந்துக அன்பு .


நனிபல சீர்மிகு நற்றமிழ் கற்போம்
பனியென வந்திடும் பாவங்கள் நீங்க
தனித்தமிழ் வேண்டியே தாபிப்போம் நாளும்
இனியாவும் நன்மையே ஈங்கு .


சங்குகொண்டே ஓதுவோம் சந்ததி மேம்பட
பங்கிடவே உண்டோ பரவச செந்தமிழை
மங்காது வாழ்ந்திடுமாம் மாசற்றப் பைந்தமிழ்
தங்கிடுமே நாட்டில் தழைத்து .


ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-Jan-18, 1:12 pm)
Tanglish : thamizh
பார்வை : 149

மேலே