எதுவரும் உன்னோடு இறுதி வரை

எதுவரும் உன்னோடு இறுதி வரை - என்று
அதை எண்ணியோர் இவ்வுலகில் எவர் எவரோ
பண்ணால் பல பாடல் பாடிவிட்டால்
பின்னால் அது தொடரும் என எண்ணலாமோ

துன்பத்தை தொடராக செய்து வந்து
துதித்து இறையின் புகழ் பரப்ப செயல் செய்து
அடுத்து வரும் சில காலந்தோறும்
அப்பழுக்கற்ற செயல் செய்தால் இறுதி வருமோ

எந்நாளும் இறைவனின் நாமம் சொல்லி
உடல் எங்கெங்கும் அவனுடைய குறியை இட்டு
குறையாமல் செல்வத்திற்கு சூடங்காட்டி
குதுகலித்து வாழ்ந்து வந்தால் அது கூட வருமோ

பட்டங்கள் பதவிகள் பல பல பெற்று
சட்டங்கள் திட்டங்கள் திறம்பட செய்து
யுத்தங்களில் யோகங்களில் வெற்றிகள் குவித்தாலும்
கற்ற வித்தைகள் எல்லாம் கடைசி வரை வருமோ

எவை தான் இவ்வுடலினை உயிர் நீங்கின்
இறுதி வரை வந்திருந்து துணைக் கொடுக்கும்
இறுதியாத்திரை கண்டு வந்தோர் எவர் எவரோ
அவர் கூறின் அர்த்தமான நற் விளக்கம் கிடைக்குமோ?
- - - நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (13-May-19, 12:43 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 55

மேலே