நிசப்த சருகு

உடைக்க இயலாத
அரும்பாத ஒரு கவிதை.

காலத்தில் நொதித்து
சதா இரவொன்றுடன்
அலையும் அக்கவிதையில்

மெல்ல வீசிக்கொண்டிருக்கும்
காற்றும் அதன் மூச்சும்.

அதன் அர்த்தங்கள்
படியேறியபடி இருக்கிறது
மனதிலிருந்து தனிமைக்கு.

யாருமற்ற அவனுக்குள்ளும்
ஓடிக்களைத்தன சொற்கள்.

தளும்பிய ஏகாந்தத்தில்
ஆவி பறக்கும் சொற்களில்

அலையும் உனக்கும் கூட
அது முளைக்கிறது
பகலொன்றின் நாய் பாய்ச்சலில்.

கவிதை ஓர் ஓரத்திலிருந்து
நகர்கிறது அதன் மையத்தில்

எங்கும் ஒளியற்ற மவ்னமாய்.

எழுதியவர் : ஸ்பரிசன் (13-May-19, 2:46 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : nisaptha saruku
பார்வை : 41

மேலே