அன்னையே வரம்

ஈன்ற பொழுதின் இன்பங்களில்
உன் கருவறை கோவிலாக்கி
விக்ரகமாய் வளர்த்தாய் என்னை
என் முதல் அழுகையில்
வலியோடு உன் சிரிப்பு
என் வாசம் முகர்ந்து
மகிழ்ந்த உன் பூமுகம்
என் இணங்கா தருணங்களை
உன் அன்பால் கரைத்தவளே
என் பார்வை விசாலமாக்கி
உறவுகளை அறிமுகஞ் செய்தவளே
என் நன்னடத்தை செதுக்கிய
முதல் ஆசானும் நீயே
என்றும் என் நலம்விரும்பும்
நல்லுள்ளம் கொண்டவளே தாயே
மறுபிறவி வேண்டுகிறேன் உனக்கு
மீண்டும் உன் சேயாகும்
இப்பிறவி ஆவல் ஈடேற!

எழுதியவர் : அருண்மொழி (12-May-19, 11:37 am)
சேர்த்தது : அருண்மொழி
Tanglish : annaiyae varam
பார்வை : 66

மேலே