அன்பா நன்றியா

அன்பா??? நன்றியா???

அனுதினமும் நிகழும் அதிசயம் அன்பு ; என்றோ நிகழ்ந்த அதிசயம் நன்றி....

அள்ள அள்ள குறையாதது அன்பு ;
கைம்மாறு செய்வதில் முடிவது நன்றி...

உறவுகளை இணைக்கும் பாலம் அன்பு ;
உதறிப்போக துணிவது நன்றி...

உரிமை பெருகும் உண்மையே அன்பு ;
உரிமை பறிக்கும் இடைவெளி நன்றி...

தகுதி எதிர்பாராத உத்தமம் அன்பு ;
தகுதிபார்த்து விலகுவது நன்றி...

அன்பை புகழ்ந்து துரோகங்கள் வரும் ;
நன்றியை இகழ்ந்து ஏளனம் வரும்...

அன்பினால் வரும் அன்பு வாழ்நாள் சாதனை ;
நன்றியால் வரும் சிறப்பு சாட்சியுள்ள வாழ்க்கை....

எழுதியவர் : ஜான் (23-Mar-19, 11:22 am)
சேர்த்தது : ஜான்
பார்வை : 178

மேலே