கண்ணாடி தொட்டியில் வண்ண மீன்கள்

எத்தனை கிலோமீட்டர்கள் நீந்தியிருக்கும்
வண்ண மீன்கள்?
இரண்டடி கண்ணாடி தொட்டியில்...

எத்தனை முறை பார்த்திருக்கும் தன் முகங்களை?
பிரதிபலிக்கும் நாலு பக்கக்
கண்ணாடி சுவர்களில்...

சரி!
எத்தனை நாட்கள் தான் கழிந்திருக்கும்
இந்த சினஞ்சிறு தொட்டிக்குள்..

ஒரு ஐந்து நிமிட காத்திருப்பிற்கு
இருப்பு கொள்ளாமல்
மீன்களை பார்த்து
கேட்டுக்கொண்டிருக்கிறேன்
வியப்போடு!

எழுதியவர் : சிவா. அமுதன் (22-Mar-19, 9:51 pm)
சேர்த்தது : சிவா அமுதன்
Tanglish : vanna meenkal
பார்வை : 237

மேலே