பேசிவிடு, அன்றேல் கொன்றுவிடு

எனக்குள் எனை நான்
தேடினாலும்- கிடைப்பதோ
விடையாய் நீயொருவனே...

துடிக்கும் இதயம்தனில்
சிரிக்கும் கண்ணனாய்
துளிர்ப்பவனும் நீயொருவனே...

அனைத்தும் நீயாய்
மாறியதன் மாயமோ,
அறியேன் நான்...

தூறும் நினைவினுள்
நானும் நனைகிறேன்
தாகம் தீராமலே...

நீளும் மௌனங்களில்
நாளும் அடைகிறேன்
நரக வேதனையே ...

தேடும் உயிர் அது(வு)ம்
தேய்பிறை காட்டுதே
தேகம் சேராமலே...

வாழும் ஆசை அது(வு)ம்
வாடிச் சரியுதே
வார்த்தை கேளாமலே...

பேசி விடு உயிரே,
அன்றேல் - எனை
கொன்று விடு இன்றே..!

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (12-Dec-15, 9:35 am)
பார்வை : 511

மேலே