மழை துளியில் கண்ணீர்

நீரின்றி அமையாது உலகு என்ற ஊரில்...
ஏரியெல்லாம் இரையாக்கி....
எழுத்தறிவை விற்கின்ற வியாபாரிகள் கூடமாக்கி ..
பாய்ந்தோடும் இடமெல்லாம்..
பாமரனை நசுக்கி விட்டு...
வளம் தந்த பூமியில்...
வளைத்து போட்ட அரசியல்வாதிகளே..
உன் ஆசைக்கு எல்லையில்லை..
இயற்கை மேல் நீ இஷ்டப்பட..
மண்ணெல்லாம் மனிதராய் ஆக்கி..
மழை நீரை அன்னாந்து பார்த்தாய்..
இருந்த இடமெல்லாம் இன்றில்லை..
எத்தனையோ நாள்கள் தவித்திருக்கும் என் மழை அன்னை..
உணர்வாய் இருந்த உறவையும்...
சுரண்டி அல்லும் மணல் கும்பல்..
வேதனையை தன்னுள்ளே தவித்த தாலோ...
உன் கண்ணீரின் பாரம் தாங்காமல் நீ அழுகிறாய்...
எத்தனை பாவங்கள் உனக்கு செய்திருக்கோம். என..
இன்னும் புரியவில்லை எங்களுக்கு.
இனியாவது உன்னை வாழ வைப்போம...
என்று நீ ஏங்கும் நினைவை..
கனவாய் போகுமா...
கண்ணீரில் கரைகிறது என் மக்கள் வாழ்வு...

எழுதியவர் : (12-Dec-15, 10:16 am)
பார்வை : 60

மேலே