இவள்
கடலோரம் இவள் சென்றால்
கடலலைகளெல்லாம் கூச்சலிடுகின்றன
இவள் பாதம் தொட...
மழை முகில்களெல்லாம் மோதிக்கொள்கின்றன
மழைத்துளியென மாறி இவள் மேனி கழுவ...
மாலை நேரத் தென்றல் காற்றெல்லாம்
தேடி அலைகின்றன
இவள் தேகமெல்லாம் தொட...

