தொலைத்தாய்
நீ தொலைத்துவிட்டுச் சென்ற காகிதங்கள் எல்லாம் என்றோ நான் உனக்கு கிறுக்கிய கவிதைகள்...
கவிதைகள் பொய்யாகலாம் ஆனால் அதில் புதைந்துள்ள அர்த்தங்கள் அவ்வளவும் ஆழமானவை ஆத்மார்த்தமானவை...
இன்று நீ வீசியெறிந்த என் கவிதைத்துளிகளால் உன் காதல் பொய்யாகலாம் ஆனால் என் காதல், என் காதல் காகிதங்களால் நிரம்பி வழியும் குப்பைத்தொட்டியை விட அழகானவை அர்த்தமானவை...