பழிதீர்க்க வேண்டும்

நீ தந்த ஏமாற்றங்களின்
வலிகளை கொண்டு
என் கரத்தை கூர்தீட்டி
உன் கல் நெஞ்சை
இருமுறையேனும் குத்தி,
இன்னும் என் காதல்
எத்தனை ஆழமானது என
நீ உணரும் விதமாய்
உனை இறுகப்பற்றி
வேதனைகள் மொத்தமும்
என் விழிகள் சிந்தும்
செந்நீரில் கரைத்து விட்டு
உன் சட்டையினை இழுத்து
என் கண்ணீரை
துடைத்துக் கொண்டு
" சரி தான் போ டா" என்று
உன்னை தூக்கி
எறிந்து விட்டு
வரவேண்டும் நான்!!!!
இப்படியாக ஒருமுறையேனும்
நான் உனை
பழிதீர்க்க வேண்டும்.....

எழுதியவர் : துர்கா (11-Jan-16, 12:44 pm)
பார்வை : 115

மேலே