அனுசா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அனுசா
இடம்:  மும்பை
பிறந்த தேதி :  27-Sep-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-Jun-2014
பார்த்தவர்கள்:  764
புள்ளி:  235

என்னைப் பற்றி...

உன்னை விரும்பு
எழுத முயற்சிக்கிறேன் , பிழை இருந்தால் மன்னித்து குறையே சுட்டி காட்டவும் நட்புக்களே

என் படைப்புகள்
அனுசா செய்திகள்
அனுசா - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jan-2016 12:44 pm

நீ தந்த ஏமாற்றங்களின்
வலிகளை கொண்டு
என் கரத்தை கூர்தீட்டி
உன் கல் நெஞ்சை
இருமுறையேனும் குத்தி,
இன்னும் என் காதல்
எத்தனை ஆழமானது என
நீ உணரும் விதமாய்
உனை இறுகப்பற்றி
வேதனைகள் மொத்தமும்
என் விழிகள் சிந்தும்
செந்நீரில் கரைத்து விட்டு
உன் சட்டையினை இழுத்து
என் கண்ணீரை
துடைத்துக் கொண்டு
" சரி தான் போ டா" என்று
உன்னை தூக்கி
எறிந்து விட்டு
வரவேண்டும் நான்!!!!
இப்படியாக ஒருமுறையேனும்
நான் உனை
பழிதீர்க்க வேண்டும்.....

மேலும்

அருமை 25-Nov-2016 1:33 pm
அருமை வாழ்த்துக்கள் 16-Jan-2016 5:21 pm
வித்தியாசமான பார்வை ... ஆனால் காதலில் மட்டும் இவை சாத்தியம் ... வாழ்த்துகள் 11-Jan-2016 4:02 pm
புதுவிதமான புரட்சி சிந்தனை .. வரிகளில் தான் கொஞ்சம் கவித்துவம் இருந்திருக்கணும் ... 11-Jan-2016 3:54 pm
அனுசா - மடந்தை ஜெபக்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jul-2015 12:07 pm

விதியே
மதியால் வெல்ல போராடும்
மதிகெட்ட மூடன் நான்

மேலும்

நன்றி தோழா ..................... தங்கள் வரவில் மிக்க மகிழ்ச்சி 17-Jul-2015 10:49 am
வாழ்க்கை எனும் சக்கரத்தில் தான் கவிகளும் சுழல்கிறது என்பது தான் உண்மை 12-Jul-2015 2:11 pm
நன்றி சகோதரரே............. 11-Jul-2015 9:34 am
அதுதான் அனுபவம்... அதை வைத்து எதை வேண்டுமானாலும் வெல்லலாம்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Jul-2015 1:53 am
ஜின்னா அளித்த படைப்பில் (public) kavithasababathi மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
31-May-2015 4:33 am

அவித்த முட்டையில்
அங்கங்கே சிறு வெடிப்பு
கருக்கலைப்பு...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சட்டத்தில் ஓட்டைகள்
சகஜம்தானே
புல்லாங்குழல்....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

யார் நனைந்தாலும்
நனையாமல் இருக்கிறது
மழை...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நெற்றிக் கண் திறப்பினும்
குற்றமில்லை
தேங்காய்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அழகு குறிப்பில்
ஆபத்து பின்குறிப்பு
ரோஜாமுள்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விலைவாசி ''ஏறுவதை''
விளையாட்டாய் நினைக்குமா?
ஏணி...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பத்து ரூபாய் காணிக்கையில்
பத்திரமாய் இருக்கிறது
கடவுளின் நம்பிக்கை...
~

மேலும்

மிக்க நன்றி... மிக்க மகிழ்ச்சி தங்கள் கருத்தில்... 25-Nov-2015 11:33 pm
மிக்க நன்றி... மிக்க மகிழ்ச்சி தங்கள் கருத்தில்... 25-Nov-2015 11:33 pm
மிக்க நன்றி... மிக்க மகிழ்ச்சி தங்கள் கருத்தில்... 25-Nov-2015 11:33 pm
மிக்க நன்றி... தங்களின் புரிதல் கருத்திலும் எடுத்துக் காட்டிலும் மிக்க மகிழ்ந்தேன்... மிக்க மகிழ்ச்சி தங்கள் கருத்தில்... 25-Nov-2015 11:32 pm
அனுசா - பூக்காரன் கவிதைகள் - பைராகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jul-2015 11:07 am

எழுதியவர் : அனுசரன்
நாள் : 15-Oct-12, 9:36 pm

அரங்கேற்றவேளை
==================

மறைந்திருக்கும்
வார்த்தைகளுக்குள்
ஒளிந்திருக்கிறது
சொல்லப்படாத வெட்கம்

இதயத்தில்
முதல் துளி துளிர்ந்தபோதுதான்
இல்லாத மூட நம்பிக்கைகளின்மேலே
இறுக்கங் கண்டிருப்போம்
இரண்டில் ஒரு விரல் தொடுவது முதல்
இரு கண்களில் ஏதோ ஒன்று துடிப்பதுவரை

கொஞ்சம் கூட
கண்டுக்கொள்ளாமல்
அனிச்சை ஊடுருவுகிற செயல்களால்
ஆண்மை உரைக்கும்
மயிர்க்காடுகளில்
அடர்த்தி கூடிக்காணும்

அன்றுவரை
சொல்லப்படாத பொய்களுக்கு
கைக்கால்கள் முளைத்து
அவை கவிதைகளாகியிருக்கும்

பார்வையையும் புன்னகையையும்
புதுமொழ

மேலும்

நல்ல படைப்பு நல்வாழ்த்துக்கள் 02-Jul-2015 12:32 pm
தொடரட்டும் 02-Jul-2015 12:22 pm
அழகு 02-Jul-2015 11:42 am
அருமை ..., 02-Jul-2015 11:13 am
அனுசா - பூக்காரன் கவிதைகள் - பைராகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jul-2015 11:07 am

எழுதியவர் : அனுசரன்
நாள் : 15-Oct-12, 9:36 pm

அரங்கேற்றவேளை
==================

மறைந்திருக்கும்
வார்த்தைகளுக்குள்
ஒளிந்திருக்கிறது
சொல்லப்படாத வெட்கம்

இதயத்தில்
முதல் துளி துளிர்ந்தபோதுதான்
இல்லாத மூட நம்பிக்கைகளின்மேலே
இறுக்கங் கண்டிருப்போம்
இரண்டில் ஒரு விரல் தொடுவது முதல்
இரு கண்களில் ஏதோ ஒன்று துடிப்பதுவரை

கொஞ்சம் கூட
கண்டுக்கொள்ளாமல்
அனிச்சை ஊடுருவுகிற செயல்களால்
ஆண்மை உரைக்கும்
மயிர்க்காடுகளில்
அடர்த்தி கூடிக்காணும்

அன்றுவரை
சொல்லப்படாத பொய்களுக்கு
கைக்கால்கள் முளைத்து
அவை கவிதைகளாகியிருக்கும்

பார்வையையும் புன்னகையையும்
புதுமொழ

மேலும்

நல்ல படைப்பு நல்வாழ்த்துக்கள் 02-Jul-2015 12:32 pm
தொடரட்டும் 02-Jul-2015 12:22 pm
அழகு 02-Jul-2015 11:42 am
அருமை ..., 02-Jul-2015 11:13 am
அரங்க ஸ்ரீஜா அளித்த படைப்பை (public) அரங்க ஸ்ரீஜா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
25-May-2015 2:00 pm

காதல் ஊற்றாய் நேத்திரம்
காதில் ஊதும் செவ்விதழ்
கைகள் கோர்த்திடும் மணிக்கரம்
உன்னை நினைக்கும் போதே சுகம் வரும்

என் செவிமடல் தீண்டும் உன் சுவாசம்
என் மனதினில் தென்றலாய் வீசும்
உன் இதழ் தரும் மெல்லிய முத்தம்
என் உடலினை உறைந்திடச் செய்யும்

வேல் விழியால் பேசுகிறாய்
தேன் மலரைத் தீண்டுகிறாய்
மென்மையாய் வருடுகிறாய் - என்
பெண்மையைத் திருடுகிறாய்

உன் விரலோடு விரல் சேர்த்து
உலா வர நான் காத்திருப்பேன்
உன் மார்போடு தலை சாய்த்து
உறங்கிடத் தானே பார்த்திருப்பேன்

உன் தோள் சாயும் நிமிடம்
உதிரம் உறைந்து போகும்
உன் கரம் கோர்க்கும் தருணம்
உலகம் மறந்து போகும்

என் சுவாசம் ம

மேலும்

ஹ ஹ ..இது என் கற்பனை நண்பா !! 28-May-2015 8:08 am
தோழி கவிதையில் தங்கள் நிலையேதும்..???????:-) 27-May-2015 10:03 pm
உண்மை தான் ! மிகை நன்றி தங்கள் வாழ்த்தால் அகம் மகிழ்ந்தேன் 25-May-2015 5:36 pm
சுற்றம் சூழ்ந்து வாழ்த்த பெற்றோர் மகிழ்ந்து போற்ற உன் வலக்கரம் பற்றி மணவறை சுற்றி உன்னவளாய் வாழ்ந்திடக் காத்து நிற்கிறேன் உள்ளத்தில் உன் நினைவோடு பூத்து நிற்கிறேன் பெற்றோரில்லாமல் திருமணம் செய்யும் இன்றைய நம் தலைமுறை யில் தாங்களின் வரிகள் ஆறுதல்... பாராட்டுகள் தொடருங்கள்..... 25-May-2015 5:00 pm
மணிமேகலை பூ அளித்த படைப்பை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
20-May-2015 3:21 pm

செய்தித்தாள்களை நீ
புரட்டோ புரட்டென்று
திருப்புகையில் என்
அதிகாலைகள்
அதிக முதிர்ச்சியோடு
காட்டுகிறது...!!

தொடர்ந்து மூன்றாவது
முறையாக தொலைக்காட்சியில்
வரப்போகும் அதே
செய்திகளைக்கூட
பல்லை கடித்துக்
கொண்டு பார்த்துவிடலாம்..

ஒவ்வொருமுறையும்
முதல்முறை பார்ப்பதைபோலவே
நீ காட்டும் பாவனைகளை...
சத்தியமாக முடியாது...!!

நீ சிலபோது கொடுக்கும்
அறிவார்ந்த விளக்கங்கள்
இருக்கிறதே.....
எனை பார்த்தே
கேட்க தோன்றும்..
"இது உனக்கு தேவையா..??"

ஆயிரம்முறை சொல்லியனுப்பியும்
சொன்னதில் ஒன்றையேனும்
வாங்காமல் வந்துவிட்டு
மறந்துவிட்டேன் என்றால்கூட
மன்னிக்கலாம்....
நீ சொல்லவே இல்லை

மேலும்

மிக ரசித்தேன். (ரசிப்புக்கு காரணம் , உங்களுக்கான கூடுதல் தகவல். 18.5.2001 (note : 2001) முதல் என் வீட்டில் தொலைக்காட்சி என்ற அரக்கன் இல்லை) 26-May-2015 5:24 pm
ரசிக்கிறேன் இந்த சம்பாஷணையை ......... 21-May-2015 10:31 pm
வெவ்வெவ்வே... 21-May-2015 4:08 pm
ரைட்டு ... பிளான் பண்ணிட்டாப்ள... ம்ம்ம்... பட்டையை கிளப்புங்கள்... வந்திடுவோம்... 21-May-2015 4:01 pm
அனுசா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2014 11:17 am

ஏரு உழவ போர மச்சான்
மனசுல என்ன வெச்சிக்கோ
கண்டுக்காம நிக்குறியே
நான் தான் உன் பொஞ்சாதி தெரிஞ்சிக்கோ

நீ கருப்பசாமி உருவம்ன்னு
ஊரெல்லாம் பேச்சு
ஊருல வயசு பொண்ணுங்க
பாதி பேரு தூக்கம் தான் போச்சு

எட்ட நின்னு பாத்தாலும்
எக்குத்தப்பா தோணுது
அட என் மனசு ஏனோ தானே
உன் பின்ன சுத்துது

கஞ்சி கொண்டு வாரேன் மச்சான்
மத்தியான நேரத்துல
உழைச்சி களைச்சி போயிருப்ப
சாஞ்சிகோ என் மடிமேல

ஊரு வியக்க மூணு முடிச்சு
போட்டு விட நீ வேணும்
என் மாமன் உன்ன பக்குவமா
பாத்துக்குவான் நானும்

மச்சு வீடு வேணாம் மாமா
ஓலை குடிசை போதும்
உன் நிழலே கதியேன்னு
இருந்ததுக்க தான் தோணும்

மேலும்

மச்சு வீடு வேணாம் மாமா ஓலை குடிசை போதும் உன் நிழலே கதியேன்னு இருந்ததுக்க தான் தோணும் நீ நேரம் கெட்ட நேரத்துல்ல தொல்லை பண்ண வேணும் உன் அக்குள் வாசம் போதுமுன்னு கிரங்கிருவன் நானும் ---------------------------------------- தலைவி கூற்று அருமை. 30-Apr-2015 12:58 pm
அருமை....அருமை... 08-Dec-2014 10:04 am
காதல் கைகூட வாழ்த்துகள். 05-Nov-2014 6:24 pm
மனசுல இருக்கும் ஆழமான காதல் ஆசை வாழ்த்துக்கள் விரைவில் நடக்கட்டும் நட்பே 05-Nov-2014 4:27 pm
அனுசா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Nov-2014 12:14 pm

கொதித்தக் குழம்பின்
மசாலாக் கறை
துவைக்கும் போது
தெறித்த சோப்பு நுரை
மகனின் காயத்தைத்
துடைத்த ரத்தக்கறை
சாப்பிட்டபின் கணவனின்
கைதுடைத்த ஈரக் கறை
மகளின் தலையில்
தேய்த்த எண்ணெயின் கறை
தூங்கும் பேரனின் வாயோர
எச்சிலை துடைத்த கறை

இதுதான் அம்மாவின் சேலை....
கறை நல்லது அம்மாவின் பாசத்தில்.

மேலும்

"கறை" கவிதை அருமை ! 13-Jan-2015 5:41 pm
நன்று பாசம் நன்று 21-Dec-2014 12:19 pm
நல்ல படைப்பு 21-Dec-2014 11:02 am
அருமை அனு...! 05-Nov-2014 4:03 pm
அனுசா - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Nov-2014 4:20 pm

பிடித்தும் பிடிக்காததை போல்
அத்தை மகனிடம்

பேசவரும் போது பேசாமல் ஓடுவதும்
அத்தை மகனிடம்

சிரிப்பை மறந்தைதை போல்
அத்தை மகனிடம்

வாய் பேசா மடமை
அத்தை மகனிடம்


சீனுங்கல் அவனுக்கு உரியதாய்
அத்தை மகனிடம்


பார்வையாற்றா கண்
அத்தை மகனிடம்


கைபிடிக்கும் போது பிடிக்காததை போல்
அத்தை மகனிடம்


வலிக்கும் வலிக்கதத்தை தலையில் கொட்டும் போது
அத்தை மகனிடம்


உரிமை பறித்து கேட்கும் முன் கொடுக்கப்படும்
அத்தை மகனிடம்



வேண்டாம் என்று சொல்லி இணைவோம்
அத்தை மகனிடம்


அத்தை மகனாய் பார்க்காமல் கணவணாய்
பார்போம் என்று மனதளவில்;

மேலும்

அத்தை மகனாய் பார்க்காமல் கணவணாய் பார்போம் என்று மனதளவில்; ---நல்லது தானே 02-Nov-2014 6:55 pm
அருமை !!!!!!! 02-Nov-2014 4:36 pm
நன்றி 02-Nov-2014 1:22 pm
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் 02-Nov-2014 1:22 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (114)

சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி
மதன்ராஜ்

மதன்ராஜ்

சேலம்
சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசம்

நெடுங்கவாடி ,திருவண்ணாமல
தமிழன் சாரதி

தமிழன் சாரதி

திருவண்ணாமலை
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (114)

சிவா

சிவா

Malaysia
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (114)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
sainath

sainath

பெங்களூர்
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
மேலே