ஆசை மச்சானே

ஏரு உழவ போர மச்சான்
மனசுல என்ன வெச்சிக்கோ
கண்டுக்காம நிக்குறியே
நான் தான் உன் பொஞ்சாதி தெரிஞ்சிக்கோ

நீ கருப்பசாமி உருவம்ன்னு
ஊரெல்லாம் பேச்சு
ஊருல வயசு பொண்ணுங்க
பாதி பேரு தூக்கம் தான் போச்சு

எட்ட நின்னு பாத்தாலும்
எக்குத்தப்பா தோணுது
அட என் மனசு ஏனோ தானே
உன் பின்ன சுத்துது

கஞ்சி கொண்டு வாரேன் மச்சான்
மத்தியான நேரத்துல
உழைச்சி களைச்சி போயிருப்ப
சாஞ்சிகோ என் மடிமேல

ஊரு வியக்க மூணு முடிச்சு
போட்டு விட நீ வேணும்
என் மாமன் உன்ன பக்குவமா
பாத்துக்குவான் நானும்

மச்சு வீடு வேணாம் மாமா
ஓலை குடிசை போதும்
உன் நிழலே கதியேன்னு
இருந்ததுக்க தான் தோணும்

நீ நேரம் கெட்ட நேரத்துல்ல
தொல்லை பண்ண வேணும்
உன் அக்குள் வாசம் போதுமுன்னு
கிரங்கிருவன் நானும்

ஆசைக்கு ஒன்னு ஆஸ்த்திக்கு ஒன்னு
புள்ள ரெண்டு வேணும்
என் மச்சான் நீ புரிஞ்சிக்கிட்டு
உதவி செய்ய வேணும்...

எழுதியவர் : மோனி (5-Nov-14, 11:17 am)
Tanglish : aasai machane
பார்வை : 331

மேலே