என் காதல்

என் காதல்
கல்லறையின்
மீதுதான்
ஒரு வீட்டுக்கு
விளக்கு ஏற்றபோகிறேன் ????

முகத்திற்கு மட்டும் இல்லை
மனதிற்கும் அரிதாரம்
பூசிதான் சிரிக்கிறேன்
மணவறையில் ????

கெட்டிமேளச் சத்தமும்
என் காதல்
ஒப்பாரியாகத்தன்
கேட்கிறது ????

நம் காதலின்
முற்றுப்புள்ளிதான்
இம்மூன்று முடிச்சோ ????

என்னுள் புதைந்த
உன் நினைவுகளை
இன்றோடு
மண்ணில்
புதைக்கிறேன் ????

உன் நினைவோடு
அவன் நிழலும்
தீண்ட நான்
வேசியாவேன் அன்றோ ????

இன்றைய திருமணங்கள்
இப்படித்தான் நடக்கின்றனவோ !!!!!!

ஒரு ஆணின் காதலியோடும்
ஒரு பெண்ணின் காதலனோடும் ????

எழுதியவர் : இளையராணி (5-Nov-14, 10:36 am)
பார்வை : 134

மேலே