துரைவாணன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : துரைவாணன் |
இடம் | : அருப்புகோட்டை |
பிறந்த தேதி | : 20-Jun-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 224 |
புள்ளி | : 103 |
அப்படி ஒன்றும் இல்லை சொல்லிக்கொள்ள .
நிலவில் வடைச் சுட்ட
பாட்டியிடம்
கேட்க வேண்டிய கேள்விகள்
ஆயிரமாயிரம்...!
"அதிலொருக் கேள்வி..!
அருமை கிழவியே..
உனை வெண்ணிலவுக்குள்
குடிப்புகுத்திய முதல்
திறமைச் சாலி யார்..? "
சுட்ட வடையை
களவாடிய காகத்திடம்
கேட்கவேண்டும்
தொழில் நுணுக்கங்கள்.
"கருமை அழகே..!
எனக்கு உனைப் போல்
ஏமாறத் தெரியும்..?
தெரிய வேண்டியது ஒன்று
களவாடும் உத்தியில்
உன் பயற்சியாளர் யார்.. ? "
தந்திரமாடிய நரியிடமே
தெரிவிக்கவேண்டும்
நான் ஏமாறிய தகவல்கள்..!
"மிருகச் சாணக்கியனே..!
உனக்குத் தெரியுமா ?
அன்பு, காதல், பாசம், நட்பும் கூட
ஏமாற்றும் தந்திரமாம்
எங்கள் மனித அகராதியில்..!"
நெடுநாள்களாக ஒரு சந்தேகம். ஒரு பொருளை இத்தனை எண்ணம் இருக்கிறது என்று சொல்ல நாம் எண்களை பயன்படுத்துகிறோம்.
எகா. 5 கொய்யா என்று சொல்கிறோம்.
இதில் ஒன்றுக்கு மேற்பட்டவைகளை சொல்லும்போது 5 கொய்யாக்கள் என்று சொல்லவேண்டுமா? அல்லது 5 கொய்யா என்று சொன்னல்போதுமா?
எது சரி ?
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
நெடுநாள்களாக ஒரு சந்தேகம். ஒரு பொருளை இத்தனை எண்ணம் இருக்கிறது என்று சொல்ல நாம் எண்களை பயன்படுத்துகிறோம்.
எகா. 5 கொய்யா என்று சொல்கிறோம்.
இதில் ஒன்றுக்கு மேற்பட்டவைகளை சொல்லும்போது 5 கொய்யாக்கள் என்று சொல்லவேண்டுமா? அல்லது 5 கொய்யா என்று சொன்னல்போதுமா?
எது சரி ?
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
வருணாசிரமம் போதிக்கும் இடங்களில் இல்லாமல்
வான்மழை வேண்டி செய்யும் பூசைகளில்
இருந்துவிட்டுப் போகட்டும் கடவுள்,
சிறப்பு தரிசனச்சீட்டு கொடுத்து
மனிதனை இரகம் பிரிக்காத கோயில்களில்
இருந்துவிட்டுப் போகட்டும் கடவுள்,
கிரிக்கெட்டில் இந்தியா வெற்றிபெற வேண்டி
சில மடையர்கள் செய்யும் வேள்விகளில் இல்லாமல்
உலக அமைதி வேண்டி செய்யப்படும் ஜெபக்கூட்டங்களில்
இருந்துவிட்டுப் போகட்டும் கடவுள்,
இன்ன சாதியினருக்கு இக்கோயில் சொந்தம்
என்று எழுதியிருக்கும் கோயில்களில் இல்லாமலும்
யாவரேனும் நடந்தே செல்லவேண்டும் என்றிறுக்கிற
மலைகோயில்களிலும் குகைகோயில்களிலும்
இருந்துவிட்டுப் போகட்டும் கடவுள
வெயிலுக்கு நிழல் தருகின்றன
மாநகர்களில் பொறியாளன் வளர்த்த
நெடிய கான்க்ரீட் மரங்கள்.
வெயிலுக்கு நிழல் தருகின்றன
மாநகர்களில் பொறியாளன் வளர்த்த
நெடிய கான்க்ரீட் மரங்கள்.
எதிரெதிரே சந்தித்துகொண்ட
கடவுளும் மனிதனும்
விக்கித்துப் போயினர்,
தன்னைப் படைத்தவனைக் கண்ட மாத்திரத்தில்
இருவரும்!!!!
யாருமற்ற இடத்திலேயே எப்போதும்
நீக்கமற நிறைந்திருக்கிறாய்
அனைவரும் விரும்பும்
அமைதியே...
அரசியல் நாக்குகள் !
தேர்தல் நேரத்தில் நக்குகிறது
ஈழத்தின் கண்ணீர் !
அதிகார மையம்
அடக்குமுறை கரும்புள்ளியாக
வெள்ளை மாளிகை
பாவ கிணறு
அழுக்குவாதிகளுக்கு சொர்க்கம்
இந்திய பாரளுமன்றம்
புகைக்காதே !
எழுதும் கவிஞனின் இடதுகையில்
புகைப்பேனா!!
நாளைய மன்னர்கள்
இலட்சணத்தை வாசிக்கிறது
முகநூல்
அவிழ்க்கப்பட்ட ஆடை
பல்’லவர்களின் வேட்டையில்
வாழைப்பழம்
யுத்த சத்தம்
வெள்ளைக்காரன்கள் அழுகிறார்கள்
மழை