இருந்துவிட்டுப் போகட்டும்

வருணாசிரமம் போதிக்கும் இடங்களில் இல்லாமல்
வான்மழை வேண்டி செய்யும் பூசைகளில்
இருந்துவிட்டுப் போகட்டும் கடவுள்,

சிறப்பு தரிசனச்சீட்டு கொடுத்து
மனிதனை இரகம் பிரிக்காத கோயில்களில்
இருந்துவிட்டுப் போகட்டும் கடவுள்,

கிரிக்கெட்டில் இந்தியா வெற்றிபெற வேண்டி
சில மடையர்கள் செய்யும் வேள்விகளில் இல்லாமல்
உலக அமைதி வேண்டி செய்யப்படும் ஜெபக்கூட்டங்களில்
இருந்துவிட்டுப் போகட்டும் கடவுள்,

இன்ன சாதியினருக்கு இக்கோயில் சொந்தம்
என்று எழுதியிருக்கும் கோயில்களில் இல்லாமலும்
யாவரேனும் நடந்தே செல்லவேண்டும் என்றிறுக்கிற
மலைகோயில்களிலும் குகைகோயில்களிலும்
இருந்துவிட்டுப் போகட்டும் கடவுள்,

பேரிடர் காலங்களில் மக்களை காத்த கோயில்களில்
இருந்துவிட்டுப் போகட்டும் கடவுள்,

மொத்தத்தில் நல்லவர்களுக்காக நல்லவைகளுக்காக
இருந்துவிட்டுத்தான் போகட்டுமே கடவுள்.

-துரைவாணன்

எழுதியவர் : துரைவாணன் (26-Nov-15, 7:16 pm)
பார்வை : 79

மேலே