போக்குவரத்து சமிக்ஞை

போக்குவரத்து சமிக்கை தான்
என்னுடைய மிக பெரிய பள்ளிக்கூடம்
எத்தனை எத்தனை முகங்கள்
எத்தனை உணர்வுகள்
எத்தனை உணர்ச்சிகள்
சிலர் படபடப்பாய்
சிலர் சாந்தமாய்
இறுகிய முகங்கள்
இறுகிய மனங்கள்
மலர்ந்த சிரிப்புக்கள்
பயத்தில் உறைந்த வெளிறிய இதழ்கள்
மீசை முறுக்கும் இளசுகள்
சுடிதார் கனவுகள்
வறுமையின் எச்சம்
இயலாமையின் வருத்தம்
செழுமையின் உச்சம்
இருந்தும் திரும்பிக்கொள்ளும் கண்கள்
ஒருவரை ஒருவர் மிஞ்சும் ஏக்கங்கள்
வண்டியுடன் சேர்ந்து சிலரின் உறுமல்கள்
கொளுத்தும் வெயில்லிலும்
குளிரும் குழந்தையின் கள்ள சிரிப்பு
இடைவெளிகளில் காதல்
பார்வைகளுக்கு தப்பிய உரசல்கள்
பிறர் வாழ்வில் எண்ணங்களை எறிதல் போல்
குப்பைகள் எரியும் பேருந்து ஜன்னல்கள்
இன்னும் இப்படி பல
நாற்பது நொடிகளில் நாற்பத்தைந்தாண்டு அனுபவம்
கண்ணோரம் ஒரு கண்ணீர் துளி
இதழோரம் ஒரு சிரிப்பு
இது தான் இந்த போக்குவரத்து சமிக்ஞை

எழுதியவர் : (26-Nov-15, 9:08 pm)
பார்வை : 152

மேலே