ஹைக்கூ கலவை - சந்தோஷ்

அரசியல் நாக்குகள் !
தேர்தல் நேரத்தில் நக்குகிறது
ஈழத்தின் கண்ணீர் !

         


அதிகார மையம்
அடக்குமுறை கரும்புள்ளியாக
வெள்ளை மாளிகை

         

பாவ கிணறு
அழுக்குவாதிகளுக்கு சொர்க்கம்
இந்திய பாரளுமன்றம்

         

புகைக்காதே !
எழுதும் கவிஞனின் இடதுகையில்
புகைப்பேனா!!

         

நாளைய மன்னர்கள்
இலட்சணத்தை வாசிக்கிறது
முகநூல்

         

அவிழ்க்கப்பட்ட ஆடை
பல்’லவர்களின் வேட்டையில்
வாழைப்பழம்

         

யுத்த சத்தம்
வெள்ளைக்காரன்கள் அழுகிறார்கள்
மழை

         


------------------------------------------
இதுவரை எழுதிய துளிப்பாக்களில் சில....-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (4-Nov-14, 7:24 pm)
பார்வை : 169

மேலே