கேட்க வேண்டிய கேள்விகள் - சந்தோஷ்

நிலவில் வடைச் சுட்ட
பாட்டியிடம்
கேட்க வேண்டிய கேள்விகள்
ஆயிரமாயிரம்...!

"அதிலொருக் கேள்வி..!
அருமை கிழவியே..
உனை வெண்ணிலவுக்குள்
குடிப்புகுத்திய முதல்
திறமைச் சாலி யார்..? "

சுட்ட வடையை
களவாடிய காகத்திடம்
கேட்கவேண்டும்
தொழில் நுணுக்கங்கள்.

"கருமை அழகே..!
எனக்கு உனைப் போல்
ஏமாறத் தெரியும்..?
தெரிய வேண்டியது ஒன்று
களவாடும் உத்தியில்
உன் பயற்சியாளர் யார்.. ? "

தந்திரமாடிய நரியிடமே
தெரிவிக்கவேண்டும்
நான் ஏமாறிய தகவல்கள்..!

"மிருகச் சாணக்கியனே..!
உனக்குத் தெரியுமா ?
அன்பு, காதல், பாசம், நட்பும் கூட
ஏமாற்றும் தந்திரமாம்
எங்கள் மனித அகராதியில்..!"


**

-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : -இரா.சந்தோஷ் குமார். (20-Dec-15, 3:21 pm)
பார்வை : 194

மேலே