கறை

கொதித்தக் குழம்பின்
மசாலாக் கறை
துவைக்கும் போது
தெறித்த சோப்பு நுரை
மகனின் காயத்தைத்
துடைத்த ரத்தக்கறை
சாப்பிட்டபின் கணவனின்
கைதுடைத்த ஈரக் கறை
மகளின் தலையில்
தேய்த்த எண்ணெயின் கறை
தூங்கும் பேரனின் வாயோர
எச்சிலை துடைத்த கறை

இதுதான் அம்மாவின் சேலை....
கறை நல்லது அம்மாவின் பாசத்தில்.

எழுதியவர் : செல்வி (3-Nov-14, 12:14 pm)
பார்வை : 122

மேலே