சுட்டிப் பெண்ணே

குட்டிப் பெண்ணே ..
சுட்டிப் பெண்ணே ..
சற்று நில்லேன்
என்னை இறுக
கட்டிக் கொள்ளேன் ..

நீ தவழும் அழகு
உன் உமிழும் உதடு
மழலை இதழு - அது
மலரும் உலரும் தமிழு
எல்லாம் அழகோ அழகு ..

இரவு இரவு - அது
தந்த புதுவரவு வரவு
நீ உறவு உறவு
புத்தம் புதுவுறவு உறவு

நிறைவு நிறைவு மனதுக்கு
நிறைய நிறைவு நிறைவு
பருகு பருகு - மழலை
இன்பம் பருகு பருகு

பழகு பழகு - மகளேநீ
அழகு அழகு - உந்தன்
இதழு இதழு அதுபேசும்
தமிழு தமிழு - பார்க்கும்
இதயத்தில் பழுது பழுது ..

பிள்ளைக்கனி அமுது அமுது
அதை தினம் பருகினால்
இல்லை பிணி - இனி
நல்ல கனி - அடிமனதில்
நனியது அழகுக்கு அணி ..

மனதே .. மனதே .. அது
இனி உனதே .. உனதே ..
மகளே .. மகளே .. தவழும்
மலரே ..அலரே .. தளிரே ..

தமிழே .. அமிழ்தே.. நெகிழ்வே ..
தகவே மகவே மனதே
நினைவே கனவே உணர்வே
உறவே உயர்வே உயிரே ..

தவழும் மகளுக்காக ஒரு கவிதை . நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (9-Aug-20, 11:23 am)
பார்வை : 78

புதிய படைப்புகள்

மேலே