வா இளைஞனே வா

துணிந்து நீ நடந்தால் போதும்
துன்பங்கள்  எல்லாம் தூரப் போகும்
நடந்து போக கால்கள் இருக்கு
நடைபிணமாய் இன்னும் வாழ்வது எதற்கு
கடந்தே போகும்
காலங்கள் தானே
கடந்ததை எண்ணி கலங்குவது வீணே
அங்கம் சீவியும் மூங்கில் கீதம்
அனலிட்டு வதைத்தாலும்
மின்னுகிறது தங்கம்
கண்ணீர் சிந்தாதே  தன்மான சிங்கம்
தயக்கம் தானே
வளர்ச்சியின் அசிங்கம்

சரவிபி ரோசிசந்திரா

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (9-Aug-20, 2:30 pm)
Tanglish : vaa ilainyane vaa
பார்வை : 837

மேலே