முகநூல் பதிவு 64

ஒருவரின்
முந்தைய நடவடிக்கை வைத்து
இன்றைக்கு எடைபோடுவது சரியான முடிவாகாது...

காலவோட்டத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும்...
அது பல பாடங்களை அவர்களுக்கும்
புகட்டித் தான் சென்றிருக்கும்....
அவர்களின் நிலைப்பாடும்
மாறி புதியதொரு பரிணாமத்தை எட்டியிருக்கும்.....

வெட்டிச் சென்றவர் ஒட்டியும் வரலாம் .....
வெறுத்து மறுத்தவர்கள் பனித்து இணையலாம்....
கடிந்து கடந்தவர்கள் கரம்பற்ற விழையலாம்...
ஓர்மம் பேசி ஒதுக்கியவர்கள் ஓடிவந்து கூடலாம்.....

மறப்போம் மன்னிப்போம்...
மானிட வேடம் நமக்கு எத்தனை நாளோ....?

எழுதியவர் : வை.அமுதா (9-Aug-20, 4:10 pm)
பார்வை : 21

மேலே