திருமந்திரம் -- ஒரு வாழ்வியல் நூல் - ஓர் அறிமுகம்

திருமந்திரம் ஒரு வாழ்வியல் நூலாகும் . இதில் கூறப்பட்டுள்ள அளவிற்கு சூட்சும உலக ரகசியங்கள் குறித்த தகவல்கள் வேறு எந்த நூலிலும் இல்லை . சிவயோகம் என்ற புதிய யோகா முறையையே உருவாக்கித்தந்திருக்கிறார் திருமூலர் . திருமந்திரம் அள்ள அள்ள குறையாத ஒரு அமுதசுரபி . வாழ்க்கை நெறிகளை உணர்த்தும் ஒரு வாழ்வியல் நூல் . யோக நெறிகளை விளக்கும் யோக சூத்திரம் . தந்திர வழிகளை உணர்த்தும் தந்திர நூல் . சூட்சும செயல்களை கூறும் ஒரு மறை நூல் .

" நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லவும்
ஊன் பற்றி நின்ற உணர்வது மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே "

திருமந்திரம் பாடல் எண் - 66

தமது நெடுநாள் தவத்தின் பயனாக சிவபெருமானின் உருவ அருவ வடிவான நந்தியம்பதியிடம் நேரடியாக அருளாசி பெற்றவர் திருமூலர் . சிவயோகம் எனும் யோகா நெறியின் வழியே மெய்ஞ்ஞானம் கண்டவர் . உடலின் உள்ளே இருக்கும் உயிர் சக்தியை - இறை சக்தியை எழுப்பி இறவா நிலை அடைந்தவர் . ஒளிவடிவான இறைவனுடன் கலந்து எல்லையற்ற ஆனந்த நிலையை அனுபவித்தவர் . தான் பெற்ற இன்ப நிலையை வையகத்தில் உள்ளோரெல்லாம் பெற வேண்டும் என்ற திருமூலரின் அவாவில் உருவானதே திருமந்திரம் .

ஈசனின் பெருமைகளையே பாடுபொருளாக கொண்டவை பிற திருமுறைகள் ஆனால் திருமந்திரம் மட்டும் விதிவிலக்கு . பக்தியின் மேன்மையும் ஈசனின் பெருமைகளையும் திருமந்திரமும் கூறினாலும் , யோகப் பயிற்சிகள் , அவற்றுக்கான வழிமுறைகள் , உடலிலுள்ள சக்கரங்கள் ,அவற்றின் இயக்கங்கள் , நாடிகள் , தசை வாயுக்கள் , பஞ்ச பூதங்கள் , சித்திகள் என பல சூட்சும செய்திகள் திருமந்திரம் முழுவதிலும் நிறைந்து காணப் படுகிறது ..

திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள அளவிற்க்கு வாழ்வியல் , உடலியல் குறித்த செய்திகள் வேறு எந்த நூலிலும் கூறப்படவில்லை என்பது அசைக்க முடியாத உண்மை .சிவயோகம் என்ற புதிய முறையையே உருவாக்கித் தந்திருக்கிறார் திருமூலர் . நாம் இப்போது விஞ்ஞான உலகத்தில் வாழ்கிறோம் , சூட்சும உலகம் குறித்த நவீன விஞ்ஞானமும் பல ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது . அதன் முடிவுகளையும் கண்டுபிடிப்புகளையும் திருமூலரின் கூறுகளோடு இணைத்து ஆராயமுடியும் .

இன்னும் பலகதிகளாக வந்து மணக்கும் , உங்களை மகிழ்விக்கும் வரும் நாட்களில் ..

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (22-Aug-20, 1:45 pm)
பார்வை : 542

சிறந்த கட்டுரைகள்

மேலே