பன்னிரு திருமுறைகள் மற்றும் அதன் ஆசிரியர்கள் -- ஓர் அலசல்

சைவத் திருமுறை பனிரெண்டு என்பது நாமறிந்த செய்தி . அந்த திருமுறைகளின் வரிசை கிரமம் மற்றும் அதன் ஆசிரியர்கள் விவரங்கள் இதோ .

முதல் திருமுறை : தேவாரம் -- ஆசிரியர் -- திருஞானசம்பந்தர் , மொத்தமுள்ள பாடல்கள் 1469

இரண்டாம் திருமுறை -- தேவாரம் ---ஆசிரியர் -- திருஞானசம்பநதர் -- மொத்தமுள்ள பாடல்கள் 1331

மூன்றாம் திருமுறை -- தேவாரம் ---ஆசிரியர் -- திருஞானசம்பநதர் -- மொத்தமுள்ள பாடல்கள் 1358

நான்காம் திருமுறை -- தேவாரம் ---ஆசிரியர் -- திருநாவுக்கரசர் -- மொத்தமுள்ள பாடல்கள் 1070

ஐந்தாம் திருமுறை -- தேவாரம் ---ஆசிரியர் -- திருநாவுக்கரசர் -- மொத்தமுள்ள பாடல்கள் 1015

ஆறாம் திருமுறை -- தேவாரம் ---ஆசிரியர் -- திருநாவுக்கரசர் -- மொத்தமுள்ள பாடல்கள் 981

ஏழாம் திருமுறை -- தேவாரம் ---ஆசிரியர் -- சுந்தரர் -- மொத்தமுள்ள பாடல்கள் 1026

எட்டாம் திருமுறை -- திருவாசகம் ---ஆசிரியர்கள் -- மாணிக்கவாசகர் மற்றும் திருக்கோவையார் -- மொத்தமுள்ள பாடல்கள் 1058 .. சிறப்பு கூற்று -- திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திருக்கும் உருகார் .

ஒன்பதாம் திருமுறை -- திருவிசைப்பா மற்றும் திருப்பல்லாண்டு -- ஆசிரியர்கள் -- திருத்தக்கமாளிகைத்தேவர் , கண்டராதித்தர் , வேணாட்டியடிகள் , சேதிராசர் , பூந்துருத்திநம்பி , காடநம்பி , புருடோத்தமநம்பி , திருவாலியமுதனார் , சேந்தனார் , கருவூர்த்தேவர் --- மொத்தப் பாடங்கள் 301

பத்தாம் திருமுறை -- திருமந்திரம் -- திருமூலர் --சிவ நெறி மாற்றும் யோக நெறி , வாழ்நெறி நூல் . மொத்தம் 5000 த்திற்கும் அதிகமான பாடல்கள் அனால் நமக்கு கிடைத்திருப்பது 3000 பாடல்களே .

பதினொன்றாம் திருமுறை -- திருமுருகாற்றுப் படை உட்பட 38 நூல்கள் -- ஆசிரியர்கள் -- திருவாலிவாயுடையார் , கல்லாட தேவ நாயனார் , அதிராவடிகள் , ஐயடிகள் , காடவர் கோமான் நாயனார் , இளம்பெருமாள் அடிகள் , பர ண தேவ நாயனார் , சேரமான் பெருமான் நாயனார் , பட்டினத்துப்பிள்ளையார் , நக்கீரதேவ நாயனார் , கபில தேவ நாயனார் , காரைக்கால் அம்மையார் , நம்பியாண்டார் நம்பி -- மொத்தப் பாடல்கள் -- 1385

பனிரெண்டாம் திருமுறை -- பெரியபுராணம் -- ஆசிரியர் -- சேக்கிழார் -- மொத்தப் பாடல்கள் 4286 .

பன்னிரு திருமுறைகளையும் சேர்த்து மொத்தமாக 20253 பாடல்கள் . இவற்றில் நமக்கு கிடைத்திருப்பது 18253 பாடல்களாகும் .

நன்றி தமிழ்த்துகள் வலை !

எழுதியவர் : வசிகரன் .க (22-Aug-20, 3:49 pm)
பார்வை : 8895

மேலே