நாம் மறந்த தமிழ் சொல் துஞ்சல்

தமிழ் போன்று வளமிக்க பழமையான வாழும் மொழி வேறொன்று இருக்கும் என்று நான் நம்பவில்லை . லட்சக்கணக்கான சொற்களை கொண்ட தமிழ் மொழியின் பல ஆயிரக்கணக்கான அருமையான வாழ்த்தைகளை நாம் இன்று பயன்படுத்தவில்லை அல்லது அடுத்ததலைமுறைக்கு எடுத்து செல்ல தவறி இருக்கிறோம் என்பது வேதனையான ஒரு செய்தி . வீட்டில் குழந்தைகளுடன் தமிழில் பேசுங்கள் , அவர்களுக்கு தமிழ் வார்த்தைகளை தமிழின் பெருமையை , தாய் மொழியின் இன்றியமையாமையை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எடுத்து சொல்லிக்கொண்டே இருங்கள் . மற்ற மொழிகளை கற்பதில் எந்த தவறும் இல்லை , அதே நேரத்தில் தமிழர்களின் சொந்த வாழ்க்கை தொடர்பான எல்லா செயல்களும் தமிழில் தான் இருக்க வேண்டும் என்பது இன்றியமையாத ஒன்று . இது எழுதப்படாத ஒரு சட்டமாக செயலாக நாம் பின்பற்ற வேண்டும் .

துஞ்சல் --- இது ஒரு அழகான பழமையான தமிழ் சொல் . உறங்குதல் என்பதின் மற்றொரு பெயர் . தமிழ் இலக்கியங்களில் , திருக்குறளில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு பதம் . அழகான சொல் . என்ன காரணத்தாலோ அண்மைக்காலங்களில் இந்த சொல் அதிகளவில் பயன்படுத்தப் படாத , கேட்கப்படாத ஒரு சொல்லாக காணாமல் போயிருக்கிறது என்பது வருத்தமான ஒரு செய்தி .

துஞ்சல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ள பல குறள்களில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் எனக்கு தெரிந்த ஒரு குறளை கீழே தருகிறேன் உங்கள் பார்வைக்கு .

குறள் 1049 ; நல்குரவு

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் ; நிரப்பினுள்
யாதுஒன்றும் கண்பாடு அரிது .

ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும் : ஆனால் வறுமை
நிலையில் எவ்வகையாலும் கண்மூடித தூங்குதல் அரிது .

நிரப்பு -- வறுமை

கண்பாடு --உறக்கம்

நல்குரவு --வறுமை

நாம் மறந்த தமிழ் சொல் துஞ்சல் -- உறங்குதலின் மற்றொரு பெயர் . கண்பாடு எனப்து உறக்கத்தையே குறிக்கும் .

எழுதியவர் : வசிகரன் .க (9-Jul-20, 3:43 pm)
பார்வை : 76

மேலே