எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் - 1

தற்கால தமிழ்ப் படைப்புலகின் தலை சிறந்த எழுத்தாளர் திரு எஸ் ரா . புதினங்கள் , சிறுகதைகள் , கட்டுரைகள் , நாடகங்கள் , குழந்தைகளுக்கான ஆக்கங்கள் , திரைக்கதை , திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு தனது உரைகள் , பத்திகள் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள் , திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார் .
சஞ்சாரம் என்னும் இவருடைய படைப்புக்கு 2018 சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது .

வாழ்க்கைக் குறிப்பு :

விருது நகர் மாவட்டம் மல்லாங்கிணற்றை சொந்த ஊராகக் கொண்ட இவரது பெற்றோர் சண்முகம் , மங்கையர்க்கரசி என்போராவர் . இவரது தந்தை வழி தாத்தா திராவிட இயக்கத்தில் பற்றுடையவர் . தாய் வழித் தாத்தா திராவிட இயக்கத்தில் பற்றுடையவர் . இவ்விரு வீடுகளிலும் இலக்கியங்கள் , சமூகச் சிந்தனைகளைப் படித்தும் , பேசியும் வரும் சூழல் நிலவியதாகக் குறிப்பிடுகிறார் . ஆங்கில இலக்கியம் பயிறன்று அதிலேயே முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கி இடையில் கைவிட்டிருக்கிறார் . தற்சமயம் மனைவி சந்திரப்ரபா , குழந்தைகள் ஹரிப்ரசாத் ,ஆகாஷ் ஆகியோருடன் சென்னையில் வசித்து வருகிறார் .

இலக்கியச் செயற்பாடு :

இவரது முதல் கதையான " பழைய தண்டவாளம் " கணையாழியில் வெளியாகி இருக்கிறது . 1984 இல் எழுதத் தொடங்கிய இவரது எழுத்துக்கள் ஐம்பதிற்கும் கூடிய எண்ணிக்கையில் நூல் வடிவம் பெற்றுள்ளன . ஆனந்த விகடன் இதழில் இவர் எழுதிய
துணை எழுத்து
கதாவிலாசம்
தேசாந்திரி
கேள்விக்குறி

ஆகிய தொடர்கள் தீவிர இலக்கிய வட்டாரம் தாண்டிய பரவலான வாசகப் பரப்பை இவருக்கு ஈட்டித் தந்திருக்கின்றன . இவரது சிறுகதைகள் ஆங்கிலம் , டச்சு , பிரெஞ்சு , கன்னடம் , வங்காளம் , இந்தி , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன .

அட்சரம் என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து எட்டு இதழ்களை வெளியிட்டு இருக்கிறார் .

" இலக்கியத்தை எல்லா அர்த்தத்தில் ஒரு வாழ்நாள் சேவையாக செய்து வருபவர் எஸ்.ரா என்று ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கிறார் .
' ஜெயகாந்தன் போல .. எஸ் .ரா தமிழில் ஒரு மிகப்பெரும் இயக்கம் " என்று மனுஷ்யபுத்திரன் சொல்லி இருக்கிறார் .

புத்தாயிரத்தின் இலக்கியம் - இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்து ஆண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்கு பற்றி மதிப்பிடுகையில் ந. முருகச பாண்டியன் , எஸ்.ரா வின் நெடுங் குருதி , யாமம் ஆகிய இரு நாவல்களிலும் கதை சொல்லலில் தொடர்ச்சியுறு தன்மை ஈர்த்தியுடன் வெளிப்பட்டுள்ளது " என்று கருத்துரைத்துள்ளார் .

விருதுகள் :

வாழ்நாள் சாதனையை பாராட்டும் முகமாகக் கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2011 ஆம் ஆண்டுக்கான இயல் விருது டொராண்டோவில் வழங்கப்பட்டது . இதே இலக்கியத் தோட்ட அமைப்பு 2007 இல் புனைவு இலக்கியத்திற்கான விருதை யாமம் புதினத்துக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது .

சாம்சங் இந்தியா நிறுவனமும் சாகித்ய அகாடமி யம் இனைந்து ஆண்டுக்கு எட்டு இந்தியா மொழிகளில் சிறநத இலக்கியப் பங்களிப்பைச் செய்தவர்களுக்கு தாகூர் இலக்கிய விருதினை 2009 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கின . 2010 ஆம் ஆண்டுக்கான தாகூர் விருது யாமம் புதினத்துக்கு வழங்கப்பட்டது .

;பழனி வாழிய உலக னால நற்பணி மன்றம் நெடுங்குருதி புதினத்துக்கு 2003 ஆம் ஆண்டுக்கான ஞானவாணி விருதினை வழங்கியது .

இவர் எழுதிய அரவான் என்னும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நாடகம் (உரைநடை , கவிதை) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது .

இவர் பெற்றுள்ள பிற விருதுகள்

தமிழ் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் விருது -- 2001

ஈரோடு சி கே கே அறக்கட்டளை வழங்கிய சி கே கே இலக்கிய விருது 2008

கோவை கண்ணதாசன் கழகம் வழங்கிய இலக்கிய விருது 2011

படைப்புகளின் பட்டியல் :

உப பாண்டவம் 2000

நெடுங்குருதி -- 2003

உறுபசி -- 2005

யாமம் -- 2007

துயில் -- 2010

நிமித்தம் -- 2013

சஞ்சாரம் -- 2014

இடக்கை -- 2016

பதின் -- 2017

ஒரு சிறிய விடுமுறைக் கால காதல் கதை 2019

சிறுகதைத் தொகுப்புகள்

வெளியில் ஒருவன் , சென்னை புக்ஸ்

காட்டின் உருவம் அன்னம்

எஸ்.ரா கடகிகள் பாகம் 1 , 2 மற்றும் 3

நடந்து செல்லும் நீரூற்று 2006

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை 2008

அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது 2010

நகுலன் வீட்டில் யாருமில்லை 2009

புத்தனாவது சுலபம் 2011

தாவரங்களின் உரையாடல் 2007

வெயிலை கொண்டு வாருங்கள் 2001

பால்ய நதி 2003

மழைமான் 2012

குதிரைகள் பேச மறுக்கின்றன 2013

காந்தியோடு பேசுவேன் 2013

என்ன சொல்கிறாய் சுடரே 2015

கட்டுரைத் தொகுப்புகள் :

விழித்திருப்பவனின் இரவு 2005

இலைகளை வியக்கும் மரம் 2007

என்றார் போர்ஹோ 2009

கதா விலாசம் 2005

தேசாந்திரி 2006

கேள்விக் குறி 2007

துணை எழுத்து 2004

ஆதலினால் 2008

வாக்கியங்களில் சாலை 2002

சித்திரங்களின் விசித்திரங்கள் 2008

நம் காலத்து நாவல்கள் 2008

காற்றில் யாரோ நடக்கிறார்கள் 2008

கோடுகள் இல்லாத வரைபடம் - உலகை சுற்றிய பயனாக கட்டுரைகள்

மலைகள் சப்தமிடுவதில்லை 2009

வாசகபர்வம் 2009

சிறிது வெளிச்சம் 2010

கான் என்றது இயற்கை 2010

செகாவின் மீது பனி பெய்கிறது 2010

குறத்தி முடுக்கின் கனவுகள் 2010

என்றும் சுஜாதா 2011

கலிலியோ மண்டியிடவில்லை

சாலினுடன் பேசுங்கள்

எழுதியவர் : வசிகரன்.க (5-Jul-20, 11:11 am)
பார்வை : 41

மேலே