லாரன்ஸ்

இன்று சர்ச் ஒன்று 
சந்தோசம் கொண்டது... 
லாரன்ஸ் பிறந்தநாள் 
பிரார்த்தனை நிகழ்த்த... 

நாஞ்சில் குளுமையில்
பிறந்து வளர்ந்து
பாண்டிய நாட்டில்
படிப்பில் பாண்டியத்துவம்
பெற்று.. பல்லவ நாட்டின்
வனப்பை இன்னும் வளமாக்க
பணியாற்றும் வாய்ப்பு
நண்பன் லாரன்ஸ்க்கு..

தலைமுறைகள் 
பல வேண்டும்... 
தன் நிலை மாற... 
ஒரே தலைமுறையில் 
கற்ற கல்வியால் 
தன் நிலை மாற்றியவன் 
இந்த லாரன்ஸ்... 

கணிதம் இவனுக்கு 
கை கொடுத்தது 
பொறியியற் கல்லூரி 
செல்வதற்கு... 

கல்லூரி இவனுக்கு 
கை கொடுத்தது 
பொறியியல் பட்டம் 
பெறுவதற்கு... 

பெற்ற பட்டம் இவனுக்கு 
கை கொடுத்தது 
அரசு வேலை சேர்வதற்கு.. 

அரசு வேலை இவனுக்கு 
கை கொடுத்தது 
இவன் திறமையை 
மாநகராட்சி 
பயன்படுத்துவதற்கு.. 

முயற்சிதன் மெய்வருத்தக் 
கூலி தரும் குறளுக்கு 
நிகழ் காலச் சான்று 
நினைத்ததை முடிக்கும் 
நண்பன் லாரன்ஸ்... 

தொலைநோக்கிகளை 
அவ்வப்போது பழுது பார்த்து 
பராமரிக்க வேண்டும்... 
இந்த தொலை நோக்காளன் 
பழுதுகளை பழுது பார்த்து 
பணிகளைப் பராமரிப்பவன்... 

நினைத்தமாத்திரத்தில் 
தூங்கவும் எழவும் 
தெரிந்த லாரன்ஸிடம் 
நிறைய விஷயங்கள் 
கற்றுக்கொண்டவர்களில் 
நானும் ஒருவன் 
கல்லூரி வகுப்பறை 
விடுதி அறை நண்பனாய்... 

ஜிஸிஇ'86 டூருக்கு
மூவராய் வருவர்..
இந்த ஆண்டு நால்வராய்
அடுத்த ஆண்டில் ஐவராய்
வருவர்.. வாழ்த்துக்கள் பெறுவர்...

நண்பன் லாரன்ஸ் 
இனிய பிறந்தநாள் 
நல் வாழ்த்துக்கள்... 
இனி எல்லாம் சுகமே... 
இறைவன் தருவான் வரமே.. 
வாழ்க பல்லாண்டு
வளங்கள் எல்லாம் பெற்று...
👍😀🙏🌹🌺🌷🎂🍰

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (16-Mar-19, 10:23 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 282

மேலே