கங்கைமணி- கருத்துகள்

அறிவியல் மனிதன் நாசம் செய்கிறான் .!!!
இயற்க்கை அழிகிறதின்று.
அறிவற்ற கற்கால மனிதன் இயக்கையோடு வாழ்ந்தான் !!!???
இயற்க்கை செழித்ததன்று .
எனக்கு புரியவில்லை ....!!! எது அறிவு .???? இதற்க்கு பதில் சொல்ல அறிவுள்ளவர்கள் இங்கு யாருமில்லை .
இதை மறுப்பார் மறுக்கட்டும் . ஏற்பார் ஏற்கட்டும்.

ஐயா ! தங்களின் கவிதை அழகு .அதனினும் இக்கருத்தை கையாண்ட விதம் மிக அழகு . வாழ்த்துக்கள் .

ஒரு காதலனின் தவிப்பு இக்கவியில் தெரிகிறது அருமை ....வாழ்த்துக்கள்

அருமை !...நல்ல சிந்தனை நண்பரே ! வாழ்த்துக்கள்

அருமை நீண்ட நாளுக்குப்பிறகு ஒரு நல்ல கவிதையை வாசித்த திருப்தி எனக்கு.வாழ்த்துக்கள் நண்பரே

காதல் கொண்ட மனதின் வரிகள் அருமை ! வாழ்த்துக்கள்

அருமை ! நம்மில் அனைத்துமாக இருப்பவர் அப்பா.வாழ்த்துக்கள்

அம்மாவின் நீங்காத நினைவலைகளில் வெளிவந்திருக்கிறது இந்த வரிகள்.என் மனதை சற்று வருடிக்கொடுக்கிறது இக்கவிதை.அம்மாவின் சேலை ஒரு அழகான ஆனந்த சோலை.அதற்குள் கண்ணீரும் இருக்கும்,காயமும் இருக்கும்,வியர்வையும் இருக்கும்,விரக்தியும் இருக்கும்.ஆனாலும் அது என்றும் ஆனந்த பூங்காற்றை மட்டுமே நமக்கு வருடக்கொடுக்கும். ஐயா இக்கவிதையில் தாங்கள் அம்மாவோடு வாழ்ந்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள் அந்த வரம் பெற்றமைக்கு.

அருமை ஐயா ! தங்கள் கவிதைகள் என்றும் அருமை. உவமையற்ற கவிதை ஐயா !! தங்களின் இந்த படைப்பில் உள்ளவள்.

தங்களின் மகளிர்தின சிறப்பு கவிதைகள் அனைத்தும் மிக அருமை.எப்படி வாழ்த்துவதென்று தெரியவில்லை.தங்களுக்கு என் இனிய மகளிர்தின நல்வாழ்த்துக்கள்

அருமை !... பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த கவிதை அமைந்திருக்கிறது.வாழ்த்துக்கள்

அருமை !!! மிகச்சிறந்த கவிதை இது ., புத்துணர்வூட்டும் வரிகள்.வாழ்த்துக்கள் தோழி தொடர்ந்து எழுதுங்கள். தங்களின் கவிதையை வாசிக்கும்பொழுது எனக்கும் எழுத தோன்றுகிறது....,தங்களது கடைசி வரிகளில் இருந்து தொடங்குகிறேன்...,

வாழிய பெண்மை!
வாழியவே!
வாழ்வில் வளம் பல பெற்று -
வாழியவே !

வசந்தம் உந்தன் வாழ்விடமே-என்றும்
வான் புகழ் அடைந்தே வாழியவே !
வீண்பழி சுமத்தோர் வீழ்ந்திடவே -என்றும்
வீறிட்டெழுந்தே வாழியவே !

வேற்விடெழும்பும் கொடியல்ல நீ
வீறிட்டெழும்பும் மரமெனக்கொள்.
வாசம் வீசும் மலரென வாழ் ,
வாசல் கடந்தும் வாழ்வினை வெள்.

வாழ்த்தும் என்னை பெற்றதும் நீ -என்றும்
வாழ்த்தி என்னோ(டு) வாழ்வதும் நீ-நான்
வாழப்பெற்ற மகளும் நீ -எல்லா
வடிவில் வாழும் பெண்மையே கேள்..!!!

வீரம் உந்தன் மனத்திடம்-அது
வெறும் உடல் திடமல்ல மனதில் கொள்.
வான்வரை வை உன் இலக்கை-வெற்றி
வரும்வரை பார்த்திட்டு ஒருகை!.

வாழ்த்துக்கள் ...மகளிர் .,வாழ்த்துக்கள்
வற்றா புகழோ(டு) என்றும் வாழுங்கள்!.

-அனைவருக்கும் எனது இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் -


ஆஹா ! அருமை அருமை!...,அவள் கூந்தல் பூவின் நறுமனம் கண்டு நதியலை கூட சுவாசிக்கிறதோ ??!

அருமையான படைப்பு நண்பரே! மகிழ்ந்தேன்

அருமை ...அருமை ! மிக அருமை.கவிதை மிக அழகாக அமைந்திருக்கிறது வாழ்த்துக்கள். நான் மிகவும் இரசித்த வரிகள் ...,

அல்லும் பகலும் இணைந்தால் அந்தி - இது
அள்ளிப் புசித்திட இயலாப் பந்தி
கருவறை தானே அவர்க்கும் பிறப்பிடம் – இது
கடவுள் தெரிந்தே செய்த கலப்படம் ...சூப்பர் !!!

இதுவும் கானா ...அதுவும் கானா சூப்பர் ! மொத்தத்துல தமிழ காணோம் !

உண்மை!..காதலன் நிலை இன்றளவும் இப்படித்தானே உள்ளது.

அருமை நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்


கங்கைமணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே