அளவில்லா அன்பு

அளவில்லா அன்பிற்கு
ஏங்குகிறது உலகம்

தாய் மடி தேடும் குழந்தை
தனைமறந்தனைக்கும் அன்னை
ஈடில்லா இன்பம் இங்கே
இதை தந்த தெய்வம் எங்கே !

மகளென்றும் தெரியாது
மகனென்றும் தெரியாது
தாயென்ற உணர்வுக்கு
அணைக்கத்தான் தெரிகிறது .

படைத்தவனின் விந்தையைப்பார்
பகுத்துவைத்தான் உயிர்களை
பொதுவில் வைத்தான் தாய்மையை

இங்கே ...!
தாயும் சேயும்
ஒன்றாகிப்போனபிறகு
பெற்றோர் யாராகஇருந்தாலென்ன !

தாயன்பின் மகத்துவமிது
உயிர்களின் தனித்துவமிது

பலநேரங்களில் ....,
ஐந்தறிவிடம் ஆறறிவு
அடிபட்டுப்போகிறது .

நோய் தீர்க்கும் மருந்தொன்று
உண்டென்றால் இவ்வுலகில் அது
தாயன்பு மட்டும்தான்

நாம் எத்தனைமுறை
வேண்டுமானாலும் பிறக்கலாம்
தாயின் அன்பிற்காக
- கங்கைமணி -

எழுதியவர் : கங்கைமணி (6-Jul-24, 4:30 pm)
Tanglish : alvilla anbu
பார்வை : 143

மேலே