அம்மாவின் சமையல் அறை

அம்மாவின் சமயலறை
பெயர் பலகை
வைக்காத உணவறை
கடுகு மிளகு டப்பாக்களே பெட்டகம்
அது பிள்ளைகளுக்கு
கடவுச்சொல் இல்லாமல்
காசு கொடுக்கும் ஏடிஎம்...

கரித்துணியை கேட்டால்
சொல்லும் அம்மாவின்
வியர்வைத் துளிக் கணக்கை...
வெள்ளைத் துணியை
கேட்டால் சொல்லும்
அம்மா அவித்து வார்த்த
இட்லி கணக்கை..

வானத்தில் உள்ள நட்சத்திரங்களை கணக்கிடலாம்
நமக்கா அம்மா சுட்ட
தோசைகளை கணக்கிடமுடியுமா...

அம்மா சமையலில்
உப்பும் சர்க்கரையும் அளவோடு இருக்கும்
உணவை அள்ளி ஊட்டும்போது
அவளின் பாசம் அளவில்லாமல் இருக்கும்...

அம்மா இல்லாத சமையலறை
அது கடவுள் இல்லாத கருவறை...

*கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்*

எழுதியவர் : கவிஞர் செல்வமுத்து மன்னார் ராஜ் (6-Sep-24, 9:25 am)
பார்வை : 65

மேலே