முத்தத் தினக் கவிதை
💋💋💋💋💋💋💋💋💋💋💋
*உலக முத்தத் தினக்*
*கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
💋💋💋💋💋💋💋💋💋💋💋
இதழ்களால்
எழுதப்படும்
கவிதை.....!!!
அன்பென்னும்
துறைமுகத்தை
அடையாளம் காட்டும்
கலங்கரை விளக்கு....!!!
எச்சில் நீரைக் கூட
புனிதமாக்கும்
புண்ணிய தளம்....!!!
இதயத்தை
இதழ் வழியாக
இடமாற்றும்
அற்புதக்கலை.....!!!
பணத்தாலும்
தீர்க்க முடியாத
மன அழுத்தத்தை...
பாசத்தினால்
கொடுக்கும் முத்தம்
தீர்த்து வைக்க்கும்.....!!!
அதியமான்
ஔவைக்குக் கொடுத்த
நெல்லிக்கனியோ
சாப்பிட்டால்தான்
நீண்ட ஆயுள் கொடுக்கும்..
ஆனால்
இதை
மற்றவருக்குக் கொடுத்தாலே
ஆயுள் நீட்டிக்கும்....!!!
அரைமணி நேர
உடற்பயிற்சியின் மூலம்
உடல் எடை
குறையும் என்பதை
அத்தனை பேரும் அறிவோம்...
ஐந்து நிமிட
முத்தக் கிளர்ச்சியின் மூலம்
உடல் எடை
குறையும் என்பதை
எத்தனை பேர் அறிவோம் ?
பாக்டீரியா
வைரஸ் திருடர்களை
உடலுக்கு உள்ளே விடாமல்
சண்டையிட்டு
விரட்டி அடிக்கும்
சம்பளம் வாங்காத
காவல்காரன்....!!!
மகிழ்ச்சியை
அள்ள அள்ளக் கொடுக்கும்
அட்சயப் பாத்திரம் ....!!!
தலைவலி
உடல் வலியை
மாத்திரை
தைலம் இல்லாமலேயே
குணமாக்கும்
முத்த வைத்தியம்.....!!!
தாம்பத்திய நிகழ்ச்சிக்கு கொடுக்கப்படும்
அழைப்பிதழ்....!!!
கன்னத்தில் கொடுப்பது
அன்பான முத்தம்...
நெற்றியில் கொடுப்பது
விடைபெறும் முத்தம்....
கையில் கொடுப்பது
மரியாதையான முத்தம்
இதழ்களில் கொடுப்பது
மோகமான முத்தம்...
தாம்பத்தியத்தின்
இறுதியில் கொடுப்பது
நன்றி முத்தம்...!!!
முத்தத்தை
சிக்கனம் செய்யாமல்
தாராளமாக கொடுப்போம்..!!!
உடலையும் மனதையும்
ஆரோக்கியமாக பெறுவோம்...!!!
*முத்தத் தின வாழ்த்துகள்*
*கவிதை ரசிகன்*
💋💋💋💋💋💋💋💋💋💋💋