என் காதலி -கங்கைமணி

என் காதலி !....
கலையும் கனவினில் வந்து போகிறாள்
கலையாதோர் இன்பக் கவிதை யாகிறாள்
பூமி புத்தகம் திறந்து காட்டிய
புதிய பூவென பிறந்த மகளிவள்.

என் தாயின் சேலையின் தலைப்பை போன்றவள்
பூவை இனத்திலோர் புதிய வரவினல்
கருகூட்டி வளர்ந்திடும் இன்ப காதலால்
உயிரான ஓவியம் போல வாழ்கிறாள்.

மாலைநேரம் என் மனதை ஆள்கிறாள்
மலர்ந்த மனதில் தேன்துளியாய் விழுகிறாள்.
சாலை மலர்களாய் உதிர்ந்து ஓடுமவள்
லீலை நாடகம் நினைவை அள்ளுதே !

அரும்பும் மலர்களில் இருக்கும் தேனென
உருகி உருகி என்னுள்ளே பாய்ந்தவள்,
ஊமை வாயெனை உளற வைக்கிறாள்
உளறும் நவிலவள் நாமம் இசைக்கிறாள்.

தேகம் சமைக்கிறாள் தீண்ட தடுக்கிறாள்
தாகம் என்கிறாள் தரவும் மறுக்கிறாள்
கடத்தி போயெனை ஒளித்து கொண்டவள்
உதட்டு அசைவிலென் உயிரை எடுக்கிறாள்.

அவள் இடையின் நெளிவுகள் இன்ப திறவுகோல்,
அவள் அவிழ்ந்த கூந்தல் தொடும் கோல வளைவுகள்
கவிழ்ந்த இதயங்களை உடைக்கும் கருவிகள்.
கூடி குதிக்கும் இரு இளமை மறைவுகள்
நாடி நரம்புகளை அறுக்கும் அசைவுகள்.

தீண்டு பெண்மையே ! திறந்து என்னையே !
மாண்டு போகுமுன். மயக்கி போடுமுன் -
கெண்டை காலெழில்கண்டு வேகிறேன்.
கொண்டை பூவில் தினம் வண்டாய் வாழ்கிறேன்.

வியூகம் அமைத்து உன் விழிகள் தாக்குதே.
மோக முடிச்சுகளை மோதி திறக்குதே.
கானம் இசைக்க தினம் காற்றில் பறந்தமனம்
வானம் இடித்து உந்தன் மடியில் விழுகுதே!

வாரி அள்ளுவோம் வழியும் காதலை.
சேர்ந்து வெல்லுவோம் மோக மோதலை.
அருமை வீணை உனை தீண்ட கேட்டு,எனை
அழகு ஆயுதமே! அன்று தீண்டு.

அரச இலையறிய சரச கலை புரிய
அழைக்கும் விழிமலரை வீழ்த்தும் நிலை வருமோ .
வாளும் வீழும் திருநாளை ஆளுமவள்
அழகு பெட்டகத்தை நானம் மூடுமோ

மணமேடை ஏற்றி உனை மாலை மாற்றி
மார்போடு சாய்த்து உன் அழகை அள்ளுவேன்.
இதழ்கள் சேருமோர் இன்பவேளையில்,இந்த
இரும்பை உருக்கி நம் அரும்பை வளர்.
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (4-Feb-18, 12:38 am)
பார்வை : 440

மேலே