முஹம்மது சர்பானுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்து- கங்கைமணி

பிறந்தநாள் வாழ்த்து.


என்ன கேட்டாய் என் நண்பா !
எனைப்பார்த்து கேட்டாய் ஏன் நண்பா !
வாழ்த்துன்னை சொல்ல வயதில்லை என்றோ ?!
வயல்வெளி நீராய் வற்றினேன் என்றோ!?
நான் உனை வாழ்த்தாது தூங்கினள் நன்றோ!
நண்பனின் பிறந்தநாள் மறப்பவர் உண்டோ ?!!

கண்ணொளி மறைப்பது இமையே!...ஆயினும்
காப்பதும் அதுவே ஞாபகம் கொள்.

பொன்னெடுத் துன்னிடம் வரவில்லை யேனும்,
பொருளெடுத் துன்னிடம் தரவில்லை யேனும்,
கண்ணெடுத் துன்னெழில் காணேன் ஆயினும்.

கண்ணினும் மேல்..,கருத்தினும் மேல்..,
என்னுயிரினும் மேல்..,இவ்வுலகினும் மேல் என.,
மூவுலகறிந்தவர் ஆன்றோர் சான்றோர் ..,
ஆயிர யுகங்களாய் போற்றியே புகழ்ந்திட்ட
நற்ப்பெரும் மொழியாம் தமிழ் மொழிதன்னில்.
சொர்க்களை எடுத்து சுவைபட பிரித்து
திரைகடல் அலையினைப்போலதை அடுக்கி
ஆக்கிய கவிதை தேனதை அள்ளி
வாழ்த்தவே வந்தேன்!..இது என்
வரமெனக்கொள்வேன்.

நண்பா நீ வாழ்க !
நின்பேர் இவ்வுலகினிற் நிலைத்தது ஓங்குக!
நெருப்பினை நீ தொட நன்மலர் ஆகுக.
நேர்படும் இடர் பல நீதொட மாறுக.
அனுதினம் நின் அகம் அமைதியில் வாழுக.
ஆர்ப்பரிப்போர் உனை அன்போடு அனுகுக.
தமிழன்னை ஆசியில் தழைத்து நீ ஓங்குக
தடையற்று தமிழ் உந்தன் கவியினில் ஊறுக.

கற்றவர் நீயென மற்றவர் சொல்லிட-
பெற்றவர் பொற்கொடியே !..அவர் சொற்படி நீ நட.
படிகளை படி நட்போடதை புடி
தடைகளை உடை, உடையாதுந்தன் குடை.

நீ பிறந்தது உலகினை ஜெயித்திடவே
நின் பிறப்பது தமிழ் கரம் பற்றிடவே
நீர் இருப்பது நில வளம் பெற்றிடவே
நீ இருப்பதும் களம் பல கண்டிடவே!.

பிறந்தநாள் நின் அகம் துலக்கிடவே,அது
பிறந்தது நீ இனி துளிர்த்திடவே !
வானுயர் வாழ்வினை பெற்றிடவே
வையத்துள் வாழ்வாங்கு வாழியவே…,என்று
வாழ்த்துதே என்னுள்ளம் நட்ப்புடனே.

நேர்மறை எண்ணங்கள் நிறைந்த.,
நெற்பயிர்போல் பணிந்த என் நண்பா....,
இளமையை வளைத்து -
கல்வியின் கூடமைத்து.,உன்
முதுமையை வளரவிடு...,அதில்
என் நினைவிற்க்கோர் இடம்கொடு!.

வாழ்த்துக்களுடன் ,நண்பன்...,
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (28-Aug-18, 8:41 am)
பார்வை : 221

மேலே