பருவப் பறவைகள்
பருவகாலத்தில் சங்கமிக்கும் வேடந்தாங்கல் பறவைகள் போல
எங்கிருந்தோ வந்து இங்கே ஒன்றானோம்
அறியாதவர்களாய் தொடங்கி அன்பர்களாய் ஆடிதிரிந்தோம்
நட்பெனும் கூடுகட்டி அதில் குடும்பமாய் கொண்டாடினோம்
சிறகடித்து பறந்து இளமை வானெங்கும் வண்ணம் தீட்டி மகிழ்ந்தோம்
காலம் கழிந்தது;காட்சி முடிந்தது
இறுதியில் பருவம் முடிந்து திரும்பிசெல்லும் வெளிநாட்டு பறவைகளாய் நாம்.....