நண்பன்
நண்பா நாளையை காட்டும்
கண்ணாடி நீ
நேற்றை மறைய செய்யும்
கில்லாடி நீ
இன்றை நிஜமாகும்
பங்காளி நீ
வகுப்பில் புதியவற்றை கற்றுத்தரும்
ஆசிரியன் நீ
பெண்களை வகுப்பதில் என்
மாமன் நீ
அவளோடு நான் கொண்ட காதலுக்கு
ஆவலோடு செல்லும்
தூதுவன் நீ
இதழோடு நான் இன்புற இமைமூட
காவலன் நீ
பின் வென்றாலும் சாட்சி
ஈடுபவன் நீ
அகன்றாலும் சரக்கு
வழங்குபவன் நீ
ஒரு புகையான் இரு வாயன்
சேர செய்யும்
மாயவன் நீ
தெருவில் முறைத்த அவன்
கரு அறுக்கும்
வீரன் நீ
என் சிறு துயர் கண்டு
மனம் கலங்கும்
கோழை நீ
என் அறிவை கண்டு கைதட்டும்
சேய் நீ
என் பிரிவை கண்டு கண்களை குளிப்பாட்டும்
தாய் நீ
கவிதை விளங்காத
முட்டாள் நீ
கலங்காதே ஓர் வார்த்தை கேள்
என் நண்பன் நீ